Page Loader
2024 மக்களவை தேர்தலில் போட்டியிட விரும்பும் கங்கனா ரனாவத்?
2024 மக்களவை தேர்தலில் போட்டியிட விரும்பும் கங்கனா ரணாவத் ?

2024 மக்களவை தேர்தலில் போட்டியிட விரும்பும் கங்கனா ரனாவத்?

எழுதியவர் Nivetha P
Nov 04, 2023
07:14 pm

செய்தி முன்னோட்டம்

பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத் அண்மை காலமாக அரசியல் குறித்த தனது கருத்துக்களை தொடர்ந்து பதிவு செய்து வருகிறார். பாஜக கட்சிக்கு ஆதரவாகவே இவரது கருத்துக்கள் உள்ளன. இந்நிலையில் இவர் குஜராத் மாநிலத்திலுள்ள சோம்நாத் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அப்போது செய்தியாளர்கள் இவரிடம், 'அடுத்த வருடம் நடக்கவிருக்கும் மக்களவை தேர்தலில் போட்டியிட விரும்புகிறீர்களா?' என்று கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு இவர், "இறைவன் கிருஷ்ணர் ஆசீர்வதித்தால் நிச்சயம் போட்டியிடுவேன்" என்று பதிலளித்துள்ளார். தொடர்ந்து, 'அயோத்தியில் ராமரை வழிபட இருந்த 600 ஆண்டுக்கால தடையினை பாஜக நீக்கியுள்ளது' என்றும் குறிப்பிட்டு பேசியுள்ளார்.

நடிகை 

படுதோல்வி அடைந்த 'தேஜஸ்' திரைப்படம் 

மேலும், 'சனாதன தர்மத்தின் கொடி உலகம் முழுவதும் பறக்க வேண்டும்' என்றும் கூறினார். சமீபத்தில் இவர் நடித்து வெளியான 'தேஜஸ்' திரைப்படம் படுதோல்வி அடைந்தது. எனினும், இப்படத்தின் சிறப்பு காட்சிகளை கங்கனா ரணாவத் ஏற்பாடு செய்து உத்தரப்பிரதேச முதல்வர், உத்தரகாண்ட் முதல்வர் உள்ளிட்ட பலருக்கு போட்டு காண்பித்துள்ளார் என்று தகவல்கள் வெளியானது. இப்படத்தினை பார்த்த யோகி ஆதித்யநாத் கண்ணீர் விட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து கங்கனா தற்போது இந்திய நாட்டின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆட்சிக்கால நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டு 'எமர்ஜென்சி' என்னும் படத்தினை இயக்கி நடித்து வருகிறார் என்று கூறப்படுகிறது.