Page Loader
கமலுடன் இணையும் வீரதீரசூரன் இயக்குனர் சு.அருண்குமார் 
இந்த படத்தில் கமல் நடித்தும் தயாரித்தும் பங்களிக்கிறார்

கமலுடன் இணையும் வீரதீரசூரன் இயக்குனர் சு.அருண்குமார் 

எழுதியவர் Venkatalakshmi V
Jun 23, 2025
12:19 pm

செய்தி முன்னோட்டம்

நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய அடுத்த படத்திற்கு இயக்குநர் சு.அருண்குமாருடன் கூட்டணி சேர்ந்துள்ளார். ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் கமல் நடித்தும் தயாரித்தும் பங்களிக்கிறார். முன்னதாக மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'தக் லைஃப்' படம் எதிர்பார்ப்பைவிட பலத்த தோல்வியை சந்தித்ததைத் தொடர்ந்து, கமல் தனது எதிர்வரும் படங்களில் அதிக கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளார். இதன் தொடர்ச்சியாக, அடுத்ததாக சண்டை இயக்குனர்கள் இரட்டையரான அன்பறிவ் மாஸ்டர்களின் புதிய படத்தில் நடிக்கவுள்ளார் கமல். அந்த படம் தற்போது தயாரிப்பின் ஆரம்பகட்டத்தில் உள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கி, ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

விவரங்கள்

கமல் - சு.அருண்குமார் கூட்டணி

அன்பரிவ் மாஸ்டர்களின் படத்தை முடித்தவுடன், கமல் - சு.அருண்குமார் கூட்டணியில் புதிய திரைப்படம் துவங்கப்பட இருக்கிறது. முன்னதாக 'வீர தீர சூரன்' படத்தை இயக்கிய சு.அருண்குமார், அதற்குப் பிறகு புதிய படம் குறித்து முடிவெடுக்கவில்லை. இதற்கிடையில், ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கவுள்ள படத்திற்கு அவரை இயக்குநராக ஒப்பந்தம் செய்ததுள்ளது. ஆரம்பத்தில் இந்தப் படத்தில் வேறு யாராவது நாயகனாக நடிக்க வைக்க திட்டமிடப்பட்டிருந்ததாகவும் செய்திகள் வெளியானது. எனினும், தற்போது கமல்ஹாசன் தான் கதாநாயகனாக உறுதியாகி உள்ளார். படத்தின் திரைக்கதையை இறுதி செய்யும் பணியில் அருண்குமார் பிஸியாக இருக்கிறார் என ஊடக செய்திகள் கூறுகின்றன.