விக்ரம் 2 விற்கு தயாராகிறாரா கமல்ஹாசன்? வைரலாகும் புகைப்படத்தில் இருக்கும் குழந்தை யார்?
நடிகர் கமல்ஹாசன் இன்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு சிறு குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அதில், கமல்ஹாசனும் அந்த குழந்தையும் ஒரே மாதிரி கூலர்ஸ் மற்றும் தொப்பி அணிந்திருப்பதை காண முடிந்தது. அதை பார்த்த ரசிகர்கள் 'இந்தியன் 2' பட தோல்விக்கு பிறகு கமல் 'விக்ரம் 2' படத்தின் ஷூட்டிங்கிற்கு தயாராவதை சூசகமாக சொல்கிறார் என கருத்து தெரிவிக்க தொடங்கினர். ஆனால் இது 'விக்ரம் 2' படத்தை சார்ந்தது இல்லை என்கிறது டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி.
வைரலாகும் புகைப்படம்
யார் அந்த குழந்தை?
அந்த செய்தியறிக்கைப்படி, இந்த புகைப்படம், 'தக் லைஃப்' படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இயக்குனர் மணிரத்னம் மற்றும் கமல் ஹாசன் இருவரும் கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு பின்னர் இணையும் இப்படத்தில் ஏற்கனவே சிம்பு, கெளதம் கார்த்திக், அபிராமி, திரிஷா, நாசர் என மாபெரும் நடிகர் பட்டாளம் நடித்து வருகிறது. இப்படத்தின் டப்பிங் பணிகளும் கிட்டத்தட்ட நிறைவு பெற்று விட்டது. அனிருத் இசையமைக்கும் இந்த படம் டிசம்பர் மாத வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. இந்த நிலையில் கமல் ஹாசனின் சமீபத்திய வெளியீடான 'இந்தியன் 2' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 9 ஆம் தேதி நெட்ஃபிலிக்ஸ்-இல் வெளியாகிறது.