'கல்கி 2898 AD' திரைப்படத்தில் அமிதாப்பச்சனின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது
பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப்பச்சன் இன்று தனது 81 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்த தருணத்தில் அவர் நடிக்கும் 'கல்கி 2898 AD' திரைப்படத்தில் அவரின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது. நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப்பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன் உள்ளிட்டோர் நடிப்பில் சயின்ஸ் பிரிக்ஷன் படமாக உருவாகி வரும் இத்திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரியில் வெளியாகிறது. இந்நிலையில் படக்குழு, அமிதாப்பச்சனின் பிறந்த நாளான இன்று அவரது பிரஸ்ட் லுக் காட்சியை வெளியிட்டுள்ளது. இரண்டு மலைகளுக்கு நடுவில், கையில் கம்புடன் நிற்கும் அமிதாப்பச்சனின் உடல் முழுவதும் துணியால் மறைக்கப்பட்டு, அவரின் கண்கள் மட்டும் அந்த புகைப்படத்தில் தெரிகிறது.