புயல் பாதிப்பால் திரைத்துறையினர் சார்பில் நடைபெற இருந்த கலைஞர் நூற்றாண்டு விழா ஒத்திவைப்பு
செய்தி முன்னோட்டம்
மிக்ஜாம் புயல் பாதிப்பில் இருந்து சென்னை இன்னும் முழுவதுமாக மீளாததால், டிசம்பர் 24 ஆம் தேதி திரைத்துறையினர் சார்பில் நடைபெற இருந்த கலைஞர் நூற்றாண்டு விழா, ஜனவரி 6 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
திமுக முன்னாள் தலைவரும் தமிழ்நாடு முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் நூற்றாண்டு விழா, அரசால் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சினிமாத்துறைக்கு கலைஞர் ஆற்றிய பணிகளை போற்றும் வகையில், அனைத்து சினிமா சங்கங்கள் பங்கேற்கும் கலைஞரின் நூற்றாண்டு விழா, சேப்பாக்கம் மைதானத்தில் டிசம்பர் 24 ஆம் தேதி நடைபெறும் என முன்னர் அறிவிக்கப்பட்டது.
2nd card
ரஜினி, கமல் தலைமையில் கலைஞருக்காக திரளும் தமிழ் திரையுலகம்
தற்போது கலைஞர் நூற்றாண்டு விழா ஒத்திவைக்கப்படுவது குறித்த அறிக்கையை, தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பெய்த கன மழையால், மக்கள் சிரமத்திற்கு உள்ளாவதை கருத்தில் கொண்டும்,
தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் அரசு நிர்வாகம் நிவாரண பணிகளில் கவனம் செலுத்தி வரும் காரணத்தாலும்,
டிசம்பர் 24 ஆம் தேதி நடைபெற இருந்த கலைஞர் நூற்றாண்டு விழா, ஜனவரி 6 ஆம் தேதி மாலை நடைபெறும் என, அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதல்வர் முக ஸ்டாலின் தலைமை ஏற்கும் இந்நிகழ்ச்சியில், ரஜினிகாந்த், கமலஹாசன் உள்ளிட்ட திரைப்படங்கள் பங்கேற்கிறார்கள்.
embed
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்தும் கலைஞர்100 விழா ஜனவரி 6ம் தேதிக்கு மாற்றம்... pic.twitter.com/fHz5FkQXLw— Karthik Ravivarma (@Karthikravivarm) December 8, 2023