கைதி 2: விஜய்யின் லியோ பட ரிலீசிற்கு பிறகு படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்ப்பு
செய்தி முன்னோட்டம்
லோகேஷ் கனகராஜ், கார்த்தியுடன் இணைந்த வெற்றி படமான 'கைதி'யின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படுமென செய்திகள் கூறுகின்றன.
தற்போது, லோகேஷ் கனகராஜ், விஜய்யின் 67வது படமான, 'லியோ' படத்தை இயக்கி வருகிறார்.
அதன் ரிலீஸ் தேதி அக்டோபர் 19 ஆம் தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த லியோ படம் வெளியான பிறகு, கைதி திரைப்படத்தின் வேலைகள் தொடங்கப்படும் என ஊடகங்கள் யூகிக்கின்றன.
லோகேஷ் கனகராஜின் இரண்டாவது திரைப்படம் தான் 'கைதி'. தற்போது பேசப்பட்டு வரும் LCU -விற்கு அடிப்படையே, இந்த படம் தான்.
கார்த்தி நடித்திருந்த 'கைதி திரைப்படம் மிக பெரிய வெற்றி அடைந்ததை அடுத்து, அதே வரிசையில், 'மாஸ்டர்' மற்றும் 'விக்ரம்' படத்தை எடுத்து LCU -வை விரிவுபடுத்தினார் லோகேஷ்.
கார்த்தி
லியோ ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கும் லோகேஷ்
'கைதி' படத்தின் இரண்டாவது பாகத்தை எடுக்க போவதாக ஏற்கனவே பேச்சு எழுந்த நிலையில், இன்னும் அது குறித்த எந்த ஒரு உறுதியான தகவலும், யார் தரப்பிலும் தரப்படவில்லை.
தற்போது இயக்குனர் லோகேஷ், விஜய்யின் லியோ படப்பிடிப்பில் தீவிரமாக உள்ளார்.
செவென் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தில், நாயகியாக திரிஷா நடிக்கிறார். அவருடன் மிக பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கப்போகிறது.
மறுபுறம், கார்த்தி, ஜப்பான் படத்தின் இறுதிக்கட்ட வேளைகளில் ஈடுபட்டு உள்ளதாகவும், அதன் பிறகு நலன் குமாரசாமி, பிரேம் குமார் ஆகியோரின் படங்களின் படப்பிடிப்பு துவங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் மாதம் 'லியோ' வெளியாகும் நேரம், இருவரும் தத்தமது படவேலைகளை முடித்து கொண்டு 'கைதி 2'வில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.