
விஜய்யின் 'லியோ' படத்தின் டைட்டில் வீடியோ குறித்து வெளியான கலவையான விமர்சனம்
செய்தி முன்னோட்டம்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் அடுத்த படத்தின் தலைப்பு நேற்று வெளியானது.
லோகேஷின் முந்தைய படமான 'விக்ரம்' பட பாணியிலேயே எடுக்கப்பட்டிருந்த இந்த டைட்டில் வீடியோ குறித்து இணையத்தில் கலவையான விமர்சனங்கள் எழுந்தவண்ணம் உள்ளது.
ஒரு சாரார், லோகேஷ் வைத்து இருக்கும் LCU-விற்க்கான குறிப்புகளை ஆராய்ந்து கொண்டிருக்கும் வேளையில், மறுபுறம் இது பல படங்களில் இருந்து காப்பி அடிக்கப்பட்டதாகவும் கூறிவருகின்றனர்.
'ஜெயிலர்' படத்தில் ரஜினி அணிந்திருந்ததை போலவே, இதில் விஜய்யின் உடை உள்ளது என கூறி வருகின்றனர்.
மறுபுறம், விஜய், கத்தியை சுத்தியலால் அடிக்கும் காட்சி, ஆங்கில படமான 'Iron Man'-ல் இடம்பெற்ற காட்சியை போலவே இருக்கிறதாம்.
இது மட்டுமில்லாமல், படத்தின் ப்ரோமோவில், நாகார்ஜூனாவின் தெலுங்கு படத்தின் சாயல் உள்ளதாகவும் கூறுகின்றனர்.
ட்விட்டர் அஞ்சல்
ஜெயிலர் படத்தின் காப்பியா லியோ?
#Jailer * #Leo pic.twitter.com/rYwu6rcvu6
— 𝙎𝙄𝙑𝘼Ⓖ (@mrharichandrar1) February 3, 2023