லியோ: தளபதி 67 படத்தின் தலைப்பை வெளியிட்டது படக்குழு
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் தலைப்பை இன்று வெளியிட்டனர். 'லியோ' என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த படம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னடத்தில் ஒரே சமயத்தில் எடுக்கப்போவதாகும் அந்த தலைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 'விக்ரம்' பட பாணியிலே வெளியான டைட்டில் வீடியோ, 'ப்ளடி ஸ்வீட்' என்று பெயரிடப்பட்டு வெளியானது . கடந்த சில நாட்களாக படத்தை பற்றிய அப்டேட்டை வெளியிட்டு வரும் படக்குழு, இன்று படக்குழுவினர் தனி விமானத்தில் செல்வது போன்ற வீடியோ ஒன்றையும் வெளியிட்டு இருந்தனர். அதில், விஜய், திரிஷா, லோகேஷ் கனகராஜ் மற்றும் பல படக்குழுவினரும் இடம்பெற்றிருந்தனர். 'லியோ' படத்தில் மிக பெரிய நட்சத்திர பட்டாளம் இணைந்துள்ளது, ரசிகர்கள் எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது.
லியோ - டைட்டில் ரிவீல் புரோமோ
— Vijay (@actorvijay) February 3, 2023