பார்ட்டியில் கலந்து கொண்ட கே-பாப் பாடகர் பார்க் போ ரம் மயங்கி விழுந்தபடி உயிரிழப்பு
தென் கொரிய பாடகி பார்க் போ ரம், பல பிரபலமான கே-நாடகங்களில் பாட்டு பாடியதற்காக அறியப்பட்டவர் ஆவார். இந்நிலையில், ஒரு பார்ட்டியில் கலந்து கொண்ட அவர், மயங்கி விழுந்த நிலையில், சடலமாக மீட்கப்பட்டார். இதனால் அவரது ரசிகர்கள் மற்றும் பொழுதுபோக்கு துறையினர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மர்மமான முறையில் அவர் இறந்து கிடந்தது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். பாடகி பார்க் போ ரம் தனது அகால மரணத்திற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு ஒரு தனியார் நிகழ்வில் கலந்து கொண்டார் என்று நம்யாங்ஜு காவல் நிலைய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
தென் கொரியா முழுவதும் அதிர்ச்சி அலைகள்
அவர் மயங்கி விழுந்து கிடந்ததை அடுத்து. அவசர சேவைகள் உடனடியாக வரவழைக்கப்பட்டன. மேலும் மருத்துவ உதவி வரும் வரை அவரது நண்பர்கள் அவருக்கு CPR மற்றும் முதலுதவி செய்ய முயன்றனர். ஆனால், என்ன செய்ததும் அவரை காப்பற்ற முடியவில்லை. அவர் மருத்துவமனைக்கு சென்றடைந்தவுடன் பார்க் போ ராம் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. பார்க் போ-ரமின் திடீர் மரணம் குறித்த செய்தி தென் கொரியா முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. அவரது இறப்பிற்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்திருக்கும் அவரது ஏஜென்சி XANADU என்டர்டெயின்மென்ட், இந்த கடினமான நேரத்தில் இறந்தவரின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு தனிமை கொடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.