Page Loader
ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியான 'தேவரா' நெட்ஃபிளிக்ஸில் வருகிறது
தேவாரா பகுதி 1 வெள்ளிக்கிழமை Netflix இல் வெளியாகிறது

ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியான 'தேவரா' நெட்ஃபிளிக்ஸில் வருகிறது

எழுதியவர் Venkatalakshmi V
Nov 05, 2024
05:19 pm

செய்தி முன்னோட்டம்

ஜூனியர் என்.டி.ஆர் நடித்துள்ள தேவாரா பகுதி 1 திரைப்படம் வெள்ளிக்கிழமை (நவம்பர் 8) Netflix இல் வெளியாகிறது. இருப்பினும், இது முதலில் தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் மட்டுமே கிடைக்கும் என்று ஸ்ட்ரீமிங் நிறுவனமானது உறுதிப்படுத்தியுள்ளது. இப்படத்தின் இந்தி பதிப்பின் வெளியீட்டு தேதி இன்னும் தெரியவில்லை. நெட்ஃபிலிக்ஸ் இந்த செய்தியை இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் பகிர்ந்துள்ளது: " தேவாராவை நெட்ஃபிலிக்ஸ் இல் பாருங்கள்... விரைவில் ஹிந்தியில் வரும்." என அறிவித்துள்ளது.

திரைப்பட சுருக்கம்

'தேவாரா பார்ட் 1' படத்தில் ஜூனியர் என்டிஆர் இரட்டை வேடங்களில் நடிக்கிறார்

கொரட்டாலா சிவா இயக்கிய இந்தப் படம், ஜூனியர் என்டிஆர் நடித்த கடலோர கிராமத் தலைவரான தேவாராவை பற்றியது. கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக பழிவாங்கும் ஒரு கடத்தல்காரனை பற்றியது இந்த கதை. இப்படத்தில், அப்பா- மகன் கதாபாத்திரத்தில் ஜூனியர் NTR, ஜான்வி கபூர், சைஃப் அலி கான் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இதில், பிரகாஷ் ராஜும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

embed

Twitter Post

Apudapudu dhairyaniki thelidhu avasaraniki minchi thanu undakoodadhu ani... appudu bhayaniki theliyali, thanu ravalsina samayam ochindhi ani. Osthunnadu 🌊🐅 Watch Devara on Netflix, on 8 November in Telugu, Tamil, Malayalam and Kannada. Coming soon in Hindi.#DevaraOnNetflix pic.twitter.com/8cBzZVqv0i— Netflix India South (@Netflix_INSouth) November 5, 2024