NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / அவதார், டைட்டானிக் பட தயாரிப்பாளர் ஜான் லாண்டாவ் காலமானார்
    அடுத்த செய்திக் கட்டுரை
    அவதார், டைட்டானிக் பட தயாரிப்பாளர் ஜான் லாண்டாவ் காலமானார்

    அவதார், டைட்டானிக் பட தயாரிப்பாளர் ஜான் லாண்டாவ் காலமானார்

    எழுதியவர் Sindhuja SM
    Jul 07, 2024
    12:36 pm

    செய்தி முன்னோட்டம்

    ஹாலிவுட்: டைட்டானிக் மற்றும் அவதார் போன்ற மெகா ஹிட் படங்களை இணைந்து தயாரித்த ஆஸ்கார் விருது பெற்ற தயாரிப்பாளர் ஜான் லாண்டவ் காலமானார்.

    அவருக்கு 63 வயதாகிறது. அவர் இறந்த செய்தியை அவரது குடும்பத்தினர் சனிக்கிழமை ஊடகங்களுக்கு அளித்த அறிக்கையில் பகிர்ந்து கொண்டனர்.

    அவரது இறப்புக்கான காரணம் எதுவும் பகிரப்படவில்லை.

    டைட்டானிக் மற்றும் அவதார் போன்ற மிக பிரமாண்டமான இரண்டு மிகப்பெரிய வெற்றிப்படங்களில் தன்னுடன் பணியாற்றிய தனது நண்பரும் நெருங்கிய ஒத்துழைப்பாளருமான தயாரிப்பாளர் ஜான் லாண்டவின் இறப்புக்கு இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    ஹாலிவுட் 

    ஜான் லாண்டாவின் மறைவுக்கு அவதார் நாயகி இரங்கல் 

    "அவர் ஒரு அன்பான நண்பராகவும், 31 வருடங்களாக எனது நெருங்கிய ஒத்துழைப்பாளராகவும் இருந்திருக்கிறார். அவரது இறப்பை கேட்டு என்னில் ஒரு பகுதி உடைந்துவிட்டது." என்று கேமரூன் கூறியதாக அசோசியேட்டட் பிரஸ் தெரிவித்துள்ளது.

    இதற்கிடையில், அவதார் நாயகி ஜோ சல்தானாவும், சமூக ஊடகங்களில் ஜான் லாண்டவின் இழப்பிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

    "உங்கள் ஞானமும் ஆதரவும் எங்களில் பலரை வடிவமைத்துள்ளது. அதற்கு நாங்கள் எப்போதும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். உங்களது வழிகாட்டுதல் எங்களுக்கு ஊக்கமளிப்பதோடு, எங்கள் பயணத்தில் எங்களுக்கு வழிகாட்டும்" என்று அவர் கூறியுள்ளார்.

    ஜான் லாண்டவ் அவரது மனைவி ஜூலி மற்றும் அவர்களது மகன்கள், ஜேமி மற்றும் ஜோடி ஆகியோருடன் வாழ்ந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஹாலிவுட்

    சமீபத்திய

    தடாலடியாக உயர்ந்த தங்கம் விலை; இன்றைய நிலவரம் என்ன? தங்கம் வெள்ளி விலை
    பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்; கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறப்பு தாமதமாக வாய்ப்புள்ளதாக தகவல் பள்ளிகள்
    ரூ.1,000 கோடி டாஸ்மாக் பணமோசடி வழக்கில் தமிழகத்தில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை டாஸ்மாக்
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை

    ஹாலிவுட்

    அரபு நாடுகளில் 'ஸ்பைடர் மேன்: அக்ராஸ் தி ஸ்பைடர் வேர்ஸ்' படத்தை வெளியிட தடை; ஏன் தெரியுமா? ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
    60 வயதிலும் யூத்தாக வலம் வரும் ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸின் ஃபிட்னெஸ் ரகசியம் தெரியுமா? பிறந்தநாள்
    ஹாலிவுட்டில் நடக்கும் வேலைநிறுத்த போராட்டம்; காரணம் என்ன? பொழுதுபோக்கு
    பகவத் கீதையும், ஒபென்ஹெய்மரும்: 'அணுகுண்டின் தந்தை' என அழைக்கப்படும் இவரை பற்றி சில தகவல்கள் பொழுதுபோக்கு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025