
ஜிகர்தண்டா டபுள்X படத்தின் 'மாமதுர அன்னக்கொடி' வீடியோ பாடல் வெளியானது
செய்தி முன்னோட்டம்
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், SJ சூர்யா, ராகவா லாரன்ஸ் உள்ளிட்டோர் நடித்துள்ள ஜிகர்தண்டா டபுள்X திரைப்படம், தீபாவளியை முன்னிட்டு நாளை திரையரங்குகளில் வெளியாகிறது.
75களில் ஹீரோவாக துடிக்கும் ஒரு டானின் கதையாக, இப்படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் உருவாக்கியுள்ளார்.
இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள மாமதுர அன்னக்கொடி வீடியோ பாடல் தற்போது வெளியாகி உள்ளது.
ஏற்கனவே கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர், இப்பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
சந்தோஷ் நாராயணன் மற்றும் பாடகி தீ உள்ளிட்டோர் இப்பாடலை பாடியுள்ளனர்.
கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான ஜிகர்தண்டா திரைப்படத்திலும், மதுரையை சம்பந்தப்படுத்தி, 'பாண்டிய நாட்டு கொடியின் மேல' என்ற பாடல் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
2nd card
ஜிகர்தண்டா டபுள்X படத்தின் வெற்றிக்காக திருப்பதி சென்ற படக்குழுவினர்
நாளை வெளியாகும் ஜிகர்தண்டா டபுள்X படம் வெற்றி பெற வேண்டி, தற்போது பட குழுவினர் திருப்பதி சென்றுள்ளனர்.
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், ராகவா லாரன்ஸ் மற்றும் படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப குழுவினர் திருப்பதியில் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
முன்னதாக நேற்று, கார்த்திக் சுப்புராஜ், ராகவா லாரன்ஸ், எஸ்ஜே சூர்யா ஆகிய மூவரும், டர்போ படத்தின் படப்பிடிப்பில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
திருப்பதியில் ஜிகர்தண்டா டபுள்X பட குழுவினர்
#JigarthandaDoubleX team at Tirupati to seek Blessings before release ♥️
— AmuthaBharathi (@CinemaWithAB) November 9, 2023
Movie in theatres from tomorrow !! pic.twitter.com/IN3V6uvlLG