Page Loader
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் துணிகர கொள்ளை
இயக்குனரும், ரஜினியின் மூத்த மகளுமான ஐஸ்வர்யா வீட்டில் கொள்ளை போன சம்பவம் கோலிவுட் வட்டாரத்தில் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் துணிகர கொள்ளை

எழுதியவர் Venkatalakshmi V
Mar 20, 2023
09:51 am

செய்தி முன்னோட்டம்

ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தன் வீட்டு லாக்கரிலிருந்த 60-சவரன் தங்கம் மற்றும் வைர நகைகள் மாயமானதாக காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தற்போது 'லால் சலாம்' திரைப்படத்தின் ஷூட்டிங் வேலைகளில் பிஸியாக இருக்கிறார். இதற்காக, அவ்வப்போது அவுட்டோர் ஷூட்டிங் செல்வதுண்டு. அவர் இல்லாத சமயத்தில் தான் இந்த திருட்டு நடைபெற்றிருக்க முடியும் என செய்திகள் தெரிவிக்கின்றன. இது குறித்து தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்துள்ள ஐஸ்வர்யா, தன்னுடைய வீட்டில் இருக்கும் 3 பணியாட்கள் மீது தான் சந்தேகப்படுவதாகவும், காரணம், அவர்களுக்கு தான், நகைகள் லாக்கரில் இருப்பது தெரியும் எனவும் கூறியதாக செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன. இது குறித்து போலீஸ் விசாரணை நடைபெற்று வருகிறது.

ட்விட்டர் அஞ்சல்

ஐஸ்வர்யா வீட்டில் கொள்ளை