Page Loader
மகன்களுடன் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்: இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்
மகன்களின் புகைப்படத்தை வெளியிட்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

மகன்களுடன் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்: இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்

எழுதியவர் Venkatalakshmi V
Feb 25, 2023
11:55 am

செய்தி முன்னோட்டம்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மகளும், இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனது மகன்களின் பள்ளி விழா ஒன்றில் பகிர்ந்து கொண்டு, அந்த புகைப்படங்களை சமீபத்தில் பகிர்ந்துள்ளார். அது இணையத்தில் தீயாக பரவி வருகிறது. நடிகர் தனுஷ்- ஐஸ்வர்யாவுக்கு, யாத்ரா, லிங்கா என இரு மகன்கள். தனுஷும், ஐஸ்வர்யாவும், திருமண வாழ்க்கையை முறித்த பின்னரும், இருவரும் தங்கள் பிள்ளைகளுக்கு நேரம் ஒதுக்க தவறுவதில்லை. தனுஷ், தன்னுடைய பட விழாக்களுக்கும், சில நேரங்களில் ஷூட்டிங் தளத்திற்கும் தனது மகன்களை அழைத்து போவதை வாடிக்கையாக வைத்துள்ளார். அதே போல ஐஸ்வர்யாவும், மகன்களுடன் நேரம் செலவழிப்பதை தவறுவதில்லை. சென்ற வருடத்தில், தன்னுடைய மூத்த மகனின் பள்ளி விழாவிற்காக தனுஷும், ஐஸ்வர்யாவும் இணைந்து வந்து கலந்து கொண்ட புகைப்படமும் வைரலானது.

ட்விட்டர் அஞ்சல்

மகன்களுடன் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்