Miss Universe 2026: புவேர்ட்டோ ரிக்கோவின் ஜெனிபர் பாரெட்டோ மகுடம் சூடி வரலாறு படைப்பு
செய்தி முன்னோட்டம்
போர்ட்டோ ரிக்கோவின் சான் ஜுவான் நகரில் நடைபெற்ற 75-வது பிரபஞ்ச அழகி இறுதிப் போட்டியில், போர்ட்டோ ரிக்கோ நாட்டைச் சேர்ந்த 27 வயதான ஜெனிஃபர் பாரெட்டோ மகுடம் சூடி வரலாறு படைத்துள்ளார். 116 நாடுகளின் அழகிகள் பங்கேற்ற இப்போட்டியில், 2025-ஆம் ஆண்டு வெற்றியாளரான மெக்சிகோவின் பாத்திமா போஷ் இவருக்கு கிரீடத்தை அணிவித்தார். இதன் மூலம் பிரபஞ்ச அழகி பட்டம் வென்ற முதல் திருமணமான பெண் மற்றும் தாய் என்ற பெருமையை ஜெனிஃபர் பெற்றுள்ளார். இப்போட்டியில் டொமினிகன் குடியரசு இரண்டாம் இடத்தையும், வெனிசுலா மூன்றாம் இடத்தையும் பிடித்தன.
பயணம்
அமெரிக்க ராணுவப் பணி முதல் 70 பவுண்ட் எடை குறைப்பு வரை
உளவியல் மற்றும் மருத்துவ சமூகப் பணியில் இரண்டு முதுகலைப் பட்டங்கள் பெற்றுள்ள ஜெனிஃபர் பாரெட்டோ, 2021-ஆம் ஆண்டு முதல் அமெரிக்கப் பாதுகாப்புத் துறையில் குடும்ப வன்முறைத் தடுப்பு நிபுணராக பணியாற்றி வருகிறார்.
அமெரிக்க ராணுவ வீரரை திருமணம் செய்து 2019-ல் ஒரு பெண் குழந்தைக்கு தாயான இவர், மாடலிங் அனுபவம் ஏதுமின்றி 2025-ல் இப்போட்டிக்காகத் தயாராகி சுமார் 70 பவுண்ட் உடல் எடையைக் குறைத்தார்.
போர்ட்டோ ரிக்கோவிற்கு 20 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்துள்ள 6-வது மகுடம் இதுவாகும். அதேசமயம் இந்தியாவின் காசியா லிஸ் மெஜோ டாப் 30 சுற்றுடன் வெளியேறி ஏமாற்றமளித்தார்.