
'தனி ஒருவன் 2' பற்றிய சூப்பர் அப்டேட் தந்த 'ஜெயம்' ராஜா!
செய்தி முன்னோட்டம்
'ஜெயம்' ரவியும் அவரது அண்ணன் ராஜாவும், பல வெற்றிப்படங்களை தந்துள்ளனர்.
அதில் பல படங்கள், ரீமேக் படங்கள் என்ற கருத்து நிலவி வந்த வேளையில் தான், 'தனி ஒருவன்' என்ற பிளாக்பஸ்டர் படத்தை தந்தனர்.
அந்த படத்தின் அடுத்த பாகத்தை ரசிகர்கள் எதிர்நோக்கி இருந்த வேளையில், 'ஜெயம்'ரவி இரண்டாம் பாகம் எடுக்க திட்டம் இருப்பதாக தெரிவித்திருந்தார்.
அது எப்போது என அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த வேளையில், தற்போது அப்டேட் ஒன்றை தெரிவித்திருக்கிறார் 'ஜெயம்'ராஜா.
"தனி ஒருவன்-2 கண்டிப்பாக இந்த வருடம் அல்லது அடுத்த வருடம் திரைக்கு வரும்" என்று கூறினார்.
ராஜாவும், ரவியும் தத்தமது படங்களில் பிஸியாக இருப்பதால், கைவசம் இருக்கும் படங்களை முடித்தபின் இந்த படத்தை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ட்விட்டர் அஞ்சல்
விரைவில் தனி ஒருவன் 2!
Director Mohan Raja at #SoppanaSundari trailer launch event. #ThaniOruvan2 kicks off 2023/24 🤩 pic.twitter.com/TP6XtZH8Gu
— LetsCinema (@letscinema) March 2, 2023