3 நாட்களில் ரூ.6 கோடி வசூல்: பாக்ஸ் ஆபீஸில் ஜேசன் சஞ்சய்யின் 'சிக்மா' படைத்த சாதனை
செய்தி முன்னோட்டம்
நடிகராக இருந்து அரசியலுக்குச் சென்ற விஜய் சினிமாவிலிருந்து விலகிய நிலையில், அவரது மகன் ஜேசன் சஞ்சய் சினிமா உலகில் புதிய இயக்குநராக தனது கலை பயணத்தைத் தொடங்கியுள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான 'சிக்மா' என்ற திரைப்படத்தை ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ளார். இப்படம் கடந்த வாரம் வெளியானது. இதில் கதாநாயகனாக சந்தீப் கிஷன் நடிக்க, கதாநாயகியாக ஃபரியா அப்துல்லா நடித்துள்ளார். மேலும் சம்பத், ஷிவ் பண்டிட், நடன இயக்குநர் ராஜு சுந்தரம் மற்றும் அன்பு தாசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.
விமர்சனங்கள்
3 நாள் உலகளாவிய பாக்ஸ் ஆபிஸ் வசூல்
திரைக்கு வந்த 'சிக்மா' திரைப்படம் பார்வையாளர்களிடமும் விமர்சகர்களிடமும் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
எனினும், ஜேசன் சஞ்சய்யின் இயக்கத்தை பார்க்கும் நோக்கில் தொடக்க வார இறுதி நாட்களில் திரையரங்குகளுக்கு பார்வையாளர்கள் வந்தனர்.
முதல் மூன்று நாட்களுக்கான வசூல் விவரங்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, இப்படம் உலக அளவில் முதல் 3 நாட்களில் சுமார் ₹6 கோடியை பாக்ஸ் ஆபிஸில் வசூலித்துள்ளது.
வரும் நாட்களில் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் எப்படி இருக்கும் என்ற விவரங்களை வர்த்தக வட்டாரம் கவனித்து வருகிறது.