Loading...
சிக்மா படம் பார்த்தா விஜய் என்ன சொல்வாரு? மகன் ஜேசன் சஞ்சய் சுவாரஸ்ய பதில்
அப்பா விஜய் படம் பார்த்தால் என்ன சொல்வார் என ஜேசன் சஞ்சய் ஜாலி பதில்

சிக்மா படம் பார்த்தா விஜய் என்ன சொல்வாரு? மகன் ஜேசன் சஞ்சய் சுவாரஸ்ய பதில்

எழுதியவர் Sekar Chinnappan
Oct 01, 2026
07:56 pm

செய்தி முன்னோட்டம்

தமிழக முதல்வர் விஜயின் மகனான ஜேசன் சஞ்சய், லைகா புரடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா நடிப்பில் உருவாகியுள்ள சிக்மா எனும் அதிரடி திருட்டு-சாகசத் (Heist Action Drama) திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். திரையரங்குகளில் அக்டோபர் 2 அன்று வெளியாகவுள்ள இத்திரைப்படத்தின் புரமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் ஜேசன் சஞ்சய், சமீபத்தில் அளித்த பேட்டிகளில் தனது தந்தை விஜய் பற்றியும் தனது முதல் படம் பற்றியும் பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். கூடுதல் விபரங்கள் இங்கே:-

ஜேசன் சஞ்சயின் ஜாலி பதில்

'அப்பா விஜய் படம் பார்த்தா என்ன சொல்வாரு?' - ஜேசன் சஞ்சயின் ஜாலி பதில்

பிரபல ஊடகவியலாளர் பேர்லி மாணியின் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜேசன் சஞ்சய்யிடம், "சிக்மா படம் வெளியானதும் அதை பார்த்துவிட்டு விஜய் உங்களுக்கு போன் செய்து ஒரு நிமிடம் அமைதியாக இருந்தால் என்ன நினைப்பீர்கள்?" என கேட்கப்பட்டது.

அதற்கு நகைச்சுவையாக பதிலளித்த சஞ்சய், "பொதுவாகவே அப்பா ரொம்ப அமைதியான மனிதர்.

ஒரு கேள்வி கேட்டால் யோசித்து பதில் சொல்லவே 10 வினாடிகள் எடுத்துக்கொள்வார்.

ஒரு நிமிடம் வரை அவர் அமைதியாகவே இருந்தால், அப்பா போனை கட் பண்ணிட்டீங்களானு கேட்டுட்டு போனை வச்சிடுவேன்" என சிரித்தபடி கூறினார்.

மேலும், ஒரு படத்தை ஆராய்ந்து கருத்து சொல்ல சிறிது நேரம் தேவைப்படும் என்றும், ஆனால் தனது முதல் படத்தைப் பார்த்து அவர் கண்டிப்பாய் பெருமைப்படுவார் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

சொந்த அடையாளம்

குடும்ப பின்னணியைத் தாண்டி சொந்த அடையாளம்

மற்றொரு பேட்டியில், அரசியல் மாற்றம் மற்றும் குடும்பத்தின் பாரம்பரிய பெருமை குறித்துப் பேசிய சஞ்சய், "குடும்பத்தின் மரபு எப்போதும் கூடவே இருக்கும்.

ஆனால் நான் எனது சிறிய வட்டத்திற்குள் இருந்து கொண்டு திரையுலகில் எனது சொந்தப் படைப்பைத் தர உழைக்கிறேன்" என்றார்.

படம் தொடங்கி முதல் ஐந்து நிமிடங்களுக்கு பிறகு ரசிகர்கள் 'இயக்கம் ஜேசன் சஞ்சய்' என்பதை மறந்து, வெறும் திரைப்படமாகவே அதை ரசிப்பார்கள் என்றும், நேர்மறை அல்லது எதிர்மறையான விமர்சனங்கள் எதுவாக இருந்தாலும் தனது உழைப்பே தான் யார் என்பதை அடையாளப்படுத்தும் என்றும் உறுதியுடன் தெரிவித்தார்.

ADVERTISEMENT