'காவாலா' பாடலுக்கு நடனமாடும் இந்தியாவுக்கான ஜப்பான் தூதர்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்புகள் மத்தியில் வெளியாகி தற்போது கோடி கணக்கில் வசூல் செய்து வரும் படம் 'ஜெயிலர்'. இந்நிலையில், அனிருத் இசையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'காவாலா' பாடல் உலகம் முழுவதும் மிக பிரபலமாகியுள்ளது. தமன்னா நடனமாடியுள்ள இப்பாடலுக்கு சிறியவர் முதல் பெரியவர் வரை நடனமாடி இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள். அதன்படி, தற்போது இப்பாடலுக்கு இந்தியாவின் ஜப்பான் தூதர் ஹிரோஷி சுசூகி, ஜப்பான் நாட்டின் யூடியூபர் மயோ சான் உடன் நடனமாடி ன் அந்த வீடியோவினை அண்மையில் இணையத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், 'சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீதான தனது அன்பு தொடரும்' என்றும் குறிப்பிட்டுள்ளார்.