Page Loader
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் காதலிக்கும் நபர் இவர்தான் 
ஷிகர் பஹாரியா, அரசியல்வாதியும், மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வருமான சுஷில்குமார் ஷிண்டேவின் பேரன் ஆவார்

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் காதலிக்கும் நபர் இவர்தான் 

எழுதியவர் Venkatalakshmi V
Apr 10, 2024
12:16 pm

செய்தி முன்னோட்டம்

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர். இவர் பாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகை ஆவார். சமீபத்தில் அவர் தெலுங்கு திரைப்படவுலகிலும் காலடி எடுத்து வைத்துள்ளார். RRR படத்தின் நாயகன் Jr.NTR உடன் தேவரா திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஜான்வி கபூர், ஷிகர் பஹாரியா என்ற நபருடன் நீண்ட காலமாக நெருக்கமாக இருந்து வருகிறார். இது பற்றி சமீபத்திய கரண் ஜோஹரின் 'காபி வித் கரண்' நிகழ்ச்சியில் கூட, ஷிகர் தனக்கும் தன்னுடைய குடும்பத்தாருக்கும் எப்போதும் ஆதரவாக, எதையும் எதிர்பார்க்காமல் உடன் நிற்பவர் என தெரிவித்திருந்தார். வருடந்தோறும் ஜான்வி திருப்பதி கோவிலுக்கு செல்லும்போது, அவருடன் ஷிகர் வரத்தவறுவதில்லை.

ஜான்வி கபூர் 

சூசகமாக, காதலை வெளியுலகிற்கு தெரிவித்தார் ஜான்வி

எனினும் அவருடன் காதலில் இருப்பது குறித்து மழுப்பலான பதிலை தெரிவித்து வந்த ஜான்வி, நேற்று நடைபெற்ற படவிழா ஒன்றி, ஷிகரின் பெயர் பொறித்த நெக்லஸ் ஒன்றை அணிந்திருந்தார். இதன்மூலம், அவர் ஷிக்கரை காதலிப்பதை உறுதி செய்துள்ளார் என இணையவாசிகள் தெரிவித்து வருகின்றனர். ஷிகர் பஹாரியா, அரசியல்வாதியும், மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வருமான சுஷில்குமார் ஷிண்டேவின் பேரன் ஆவார். முன்னதாக, சில காலம் ஷிகரும் ஜான்வியும் காதலித்து வந்ததாகவும், ஆனால் பின்னர் பிரிந்ததாகவும் கூறப்படுகிறது. தற்போது இந்த ஜோடி கடந்த ஆண்டு மீண்டும் இணைந்ததாக கூறப்படுகிறது. இருவரும் பெரும்பாலான நேரங்களில் ஜோடியாகவே தோன்றுகின்றனர். ஷிகர் பல சந்தர்ப்பங்களில் போனி கபூர் மற்றும் அர்ஜுன் கபூருடனும் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதுண்டு.