
3 நாட்களில் 2 கோடி வியூக்கள் பெற்று 'காவாலா' சாதனை
செய்தி முன்னோட்டம்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜெயிலர்' திரைப்படத்தின் முதல் பாடல் சென்ற வாரம் வெள்ளிக்கிழமை (ஜூலை 7) அன்று வெளியானது.
பொதுவாக ஹீரோக்களின் அறிமுக பாடலோ, படத்தின் டைட்டில் பாடலோ தான் முதல் பாடலாக வெளியிடுவார்கள். ஆனால் இந்த முறை வித்தியாசமாக, தமன்னா ஆடும் ஒரு குத்து பாடலை வெளியிட்டனர் படக்குழுவினர்.
'இந்தியாவின் ஷகீரா' என கூறும் அளவிற்கு நடனம் ஆடியிருந்தார் தமன்னா.
'காவாலா' என துவங்கும் இந்த பாடல், ஆப்பிரிக்காவின் பழங்குடியினர் இசையை ஒத்திருந்தது. பாடலில், ரஜினிகாந்தும் சில நிமிடங்கள் நடனமாடியிருந்தார்.
யூ-ட்யூப்பில் இந்த பாடல் வெளியாகி இரண்டே நாட்களில், 2 கோடிக்கும் மேல் வியூஸ் பெற்று, சாதனை படைத்துள்ளது. இதை படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர்.
ட்விட்டர் அஞ்சல்
'காவாலா' சாதனை
#CinemaUpdate | அனைவரையும் VIBE-ல் வைத்திருக்கும் ‘ஜெயிலர்’ படத்தின் ‘காவாலா’ பாடல்!#SunNews | #Kaavaalaa | #Jailer | @Nelsondilpkumar | @rajinikanth | @tamannaahspeaks | @anirudhofficial pic.twitter.com/ZF9BvwHpMy
— Sun News (@sunnewstamil) July 10, 2023