
500 கோடி: திரையரங்க வசூலில் தொடர்ந்து சாதனை படைக்கும் ஜெயிலர்
செய்தி முன்னோட்டம்
இரு வாரங்களுக்கு முன்னர் வெளியான 'ஜெயிலர்' திரைப்படம், தொடர்ந்து பல சாதனைகளை படைத்தது வருகிறது.
முதலில் படத்தின் ட்ரைலர், யூட்யூபில் வெளியான சில மணி நேரத்தில் அதிகமான வியூஸ்களை பெற்று சாதனை பெற்றதாக தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து, படத்தின் முதல் பாடலான, 'காவாலா' பாடலும், அதே போன்றதொரு சாதனையை படைத்தது. படத்தின் டிக்கெட் விற்பனையும் சாதனை படைத்த நிலையில், திரைப்படம் வெளியாகி ஒரு வாரத்தில், தமிழ் சினிமாவில் முன்னெப்போதும் இல்லாத, வரலாற்றில் முதல்முறையாக, வெளியான முதல் வாரத்திலேயே ₹375.40 கோடி வசூலித்து சாதனை படைத்தது.
தற்போது, படம் வெளியாகி இரண்டு வாரம் முழுமையடையவுள்ள நிலையில், படத்தின் தியேட்டர் வசூல் 500 கோடியை தாண்டியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
வசூல் சாதனை
#BoxOfficeCollection: Rajinikanth's #Jailer earned Rs. 18.7 crore on Sunday. Overall, it has earned Rs. 280.85 crore in India.
— NewsBytes (@NewsBytesApp) August 21, 2023