ஜெயிலர் 2 அப்டேட்: ஷாருக்கான் -ரஜினிகாந்த் இணையும் காட்சிகளின் படப்பிடிப்பு இங்கே நடைபெறவுள்ளது
செய்தி முன்னோட்டம்
கோலிவுட்டின் உச்ச நட்சத்திரமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், பாலிவுட்டின் உச்ச நட்சத்திரமான ஷாருக்கானும் 'ஜெயிலர் 2' படத்தில் நடிக்கின்றனர் என்ற செய்தியை ஏற்கனவே தெரிவித்திருந்தோம். தற்போது அதன் அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'ஜெயிலர் 2' திரைப்படத்திற்காக இவர்களது காம்போ காட்சிகள் சண்டீகரில் படமாக்கப்படவுள்ளதாக தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
படப்பிடிப்பு
சண்டீகரில் பிரம்மாண்ட படப்பிடிப்பு
'ஜெயிலர் 2' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அடுத்தகட்டப் படப்பிடிப்பு சண்டீகரில் உள்ள ஒரு பிரம்மாண்ட தொழிற்சாலையில் நடைபெறவுள்ளது. ஊடக செய்திகளின்படி, இப்படத்தில் ஷாருக்கான் ஒரு பவர்ஃபுல் காவல் துறை அதிகாரியாக நடிக்கவுள்ளார். ரஜினிகாந்தும், ஷாருக்கானும் நேருக்கு நேர் சந்தித்து கொள்ளும் இந்தக் காட்சி, கதையின் திருப்புமுனையாகவும், திரையரங்குகளில் ரசிகர்களுக்கு பெரிய விருந்தாகவும் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, ஷாருக்கான் தயாரித்து நடித்த 'ரா ஒன்' திரைப்படத்தில் ரஜினிகாந்த் 'சிட்டி' கதாபாத்திரத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். தற்போது அதற்குப் பிரதிபலனாக ரஜினியின் படத்தில் ஷாருக்கான் கைகோர்த்துள்ளார்.