Page Loader
பெற்றோரின் பேச்சிற்கு மதிப்பு தந்து, காதலை முறித்துக்கொண்ட ஸ்ரீதேவியின் மகள், ஜான்வி
பெற்றோரின் பேச்சிற்கு மதிப்பு தந்து, காதலை முறித்துக்கொண்ட ஸ்ரீதேவியின் மகள், ஜான்வி

பெற்றோரின் பேச்சிற்கு மதிப்பு தந்து, காதலை முறித்துக்கொண்ட ஸ்ரீதேவியின் மகள், ஜான்வி

எழுதியவர் Venkatalakshmi V
Aug 31, 2023
05:15 pm

செய்தி முன்னோட்டம்

மறைந்த நடிகை ஸ்ரீதேவி, பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு, ஜான்வி கபூர், குஷி கபூர் என இரண்டு மகள்கள் உள்ளனர். இதில், அம்மாவை போலவே, ஜான்வியும் திரையுலகில் நடிக்க வந்தார். ஆனால், அவரின் முதல் திரைப்படம் வெளியாகும் முன்னரே, துரதிருஷ்டவசமாக நடிகை ஸ்ரீதேவி மரணமடைந்தார். அம்மாவின் இந்த திடீர் மறைவு, மகள்களை மிகவும் பாதித்தது என்னதான் கூற வேண்டும். அதன் பின்னர், ஹிந்தி படங்களில் மட்டும் நடித்து வந்த ஜான்வி, இப்போது தெலுங்கு நடிகரும், RRR பட நாயகனுமான ஜூனியர் என்.டி.ஆர்-இன் படத்தின் மூலம் தென்னிந்திய படவுலகில் கால் பதிக்கிறார். 'தேவரா' என பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தை தொடர்ந்து தமிழிலும் நடிக்க கதைகள் கேட்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

card 2

காதல் முறிவை பற்றி மனம் திறந்த ஜான்வி

இந்நிலையில், ஒரு பிரபல ஊடகத்தின் பேட்டி ஒன்றில், "எனது முதல் காதல், மலர்ந்த கொஞ்ச நாட்களிலேயே முறிந்து போனது. அது பள்ளிப்பருவ காதல். அப்போது எங்களுக்குள் மனமுதிர்ச்சி இல்லாத காரணமாக இருவருமே ஒரு வித குழப்பத்தில் இருந்தோம். இருவருக்குள்ளும் சண்டைகள் தான் வந்தது. காதலில் இருவருமே நேர்மையாக இல்லை. தினந்தோறும் பொய் சொல்லியே காதல் உறவை நீடித்துக்கொண்டு இருந்தோம். அந்த நேரத்தில் தான் எனது பெற்றோர், என் காதல் விஷயத்தை கண்டுபிடித்து, என்னை கண்டித்தனர். படிப்பின் மீது கவனம் செலுத்தும்படி கடுமையாக எச்சரித்தனர். அவர்கள் சொன்னதை கேட்டு, அந்த முதல் காதலை முறித்துக்கொண்டேன்" என்றார் ஜான்வி கபூர்.