LCU -வில் இணைந்த லியோ!
செய்தி முன்னோட்டம்
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிக்கும் லியோ திரைப்படமானது ரூ.300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.
இந்தத் திரைப்படம் LCU-வின் கீழ் வருமா, வராதா என்பது தான் நேற்று வரை ரசிகர்களின் கேள்வியாக இருந்தது. திரைப்படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் என இதற்கு இறுதி வரை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பதிலளிக்கவேயில்லை.
இந்நிலையில் இன்று முதல் காட்சி நிறைவடைந்ததும் பல்வேறு ரசிகர்கள் திரைப்படம் LCU-வில் உள்ளதா, இல்லையா யார் யாரெல்லாம் கேமியோ ரோலில் நடித்திருக்கிறார்கள் என்பது குறித்த விபரங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடத் தொடங்கவிட்டார்கள்.
கோலிவுட்
லியோ LCU-வின் கீழ் வருகிறதா?
அதன்படி, லோகேஷ் கனகராஜின் புதிய லியோ திரைப்படமானது LCU-வின் கீழேயே வருகிறது. கைதி படத்தில் போலீஸ் கான்ஸ்டபிள் வேடத்தில் நடித்த ஜார்ஜ் மரியான், லியோ திரைப்படத்தில் சிறிய கேமியோ கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
விக்ரம் திரைப்படத்தில், கார்த்தி போனில் பேசுவது போன்ற காட்சி அமைக்கப்பட்டு, கைதிக்கும், விக்ரமுக்கும் தொடர்பு படுத்தப்பட்டிருந்த நிலையில், லியோவிலும் அப்படியொரு காட்சி அமைக்கப்பட்டிருக்கிறதாம்.
லியோ திரைப்படத்தின் இறுதிக்காட்சியில், கமல்ஹாசன் விஜய்யிடம் போனில் பேசுவது போன்ற ஒரு காட்சி அமைக்கப்பட்டு, LCU-வுடன் லியோவை லோகேஷ் கனகராஜ் தொடர்புபடுத்தியிருக்கிறார்.
இதனைத் தவிர, 'லியோ' திரைப்படத்தில் வேறு கேமியோ காட்சிகள் மற்றும் LCU இணைப்புக் காட்சிகள் எதுவும் இடம்பெறவில்லை.