ஹாலிவுட் விருது பட்டியலில் இடம் பிடித்தது இயக்குநர் அட்லீயின் 'ஜவான்' திரைப்படம்
செய்தி முன்னோட்டம்
இயக்குநர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படத்திற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது.
ஹாலிவுட்டில் வழங்கப்படும் ஹாலிவுட் கிரியேட்டிவ் அல்லயன்ஸ் விருதுக்கான தேர்வு பட்டியலில் ஜவான் திரைப்படம் இடம்பெற்றுள்ளது.
ஜவான் திரைப்படத்தில், ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். மேலும் விஜய் சேதுபதி, பிரியாமணி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
நீண்ட நாட்களுக்குப் பின் ஷாருக்கானுக்கு வெற்றி படமாக அமைந்த இத்திரைப்படம், உலக அளவில் ஆயிரம் கோடி வசூல் செய்து சாதனையையும் படைத்துள்ளது.
இந்நிலையில், ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி, தெறி, மெர்சல் படங்கள் மூலம் இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்த அட்லீ, தற்போது ஜவான் திரைப்படம் மூலம் உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
'ஜவான்' படத்திற்கு சர்வதேச அங்கீகாரம்
The nominees for Best International Feature are:
— Hollywood Creative Alliance (@TheHCAAwards) December 7, 2023
"Anatomy of a Fall” (France)
”Concrete Utopia” (South Korea)
”Fallen Leaves” (Finland)
”Jawan” (India)
”Perfect Days” (Japan)
”Radical” (Mexico)
”Society of the Snow” (Spain)
”The Taste of Things” (France)
”The Teacher’s… pic.twitter.com/WpeYQCpxH9