ஆஸ்கார் விருதுகள்: அகாடமி விருதுகளைப் பற்றி நீங்கள் இதுவரை அறிந்திடாத சுவாரசிய தகவல்கள்!
செய்தி முன்னோட்டம்
இன்று மார்ச் 3, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 97வது அகாடமி விருதுகளுக்கு ஹாலிவுட் தயாராகி வரும் நிலையில், திரைப்படத் துறையில் மிகவும் மதிப்புமிக்க நிகழ்வுகளில் ஒன்றான இந்த விழாவைச் சுற்றியுள்ள உற்சாகம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
சிவப்பு கம்பளத்தின் பளபளப்பு மற்றும் கவர்ச்சியைத் தாண்டி, ஆஸ்கார் விருதுகளின் சில குறைவாக அறியப்பட்ட அம்சங்கள், நிகழ்வின் வரலாறு, மரபுகள் மற்றும் தனித்தன்மைகள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்வது அவசியமாகிறது.
"ஆஸ்கார்" என்ற புனைப்பெயரின் தோற்றம் முதல் ஏற்பு உரைகளைச் சுற்றியுள்ள விசித்திரமான விதிகள் வரை, அகாடமி விருதுகளைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே.
பெயரின் பிறப்பு
'ஆஸ்கார்' என்ற பெயரின் பிறப்பு
அதிகாரப்பூர்வமாக அகாடமி விருது ஆஃப் மெரிட் என்று அழைக்கப்படும், திரைத்துறையில் உலகளவில் வெற்றியாளர்களுக்கு வழங்கப்படும் விருது நீண்ட காலமாக அதன் புனைப்பெயரான "ஆஸ்கார்" என்று குறிப்பிடப்படுகிறது.
இது இப்படி அழைக்கப்பட 1936 முதல் 1943 வரை அகாடமியில் நூலகராகப் பணியாற்றிய மார்கரெட் ஹெரிக் என்பவரே காரணம் என்கிறார்கள்.
ஒரு நிர்வாகியின் மேசையில் இந்த விருதை முதன்முதலில் பார்த்தபோது, அது தனது மாமா ஆஸ்கார் போலவே இருந்ததாக ஹெரிக் குறிப்பிட்டதாகக் கூறப்படுகிறது.
அவரது கருத்தைக் கேட்ட ஒரு செய்தித்தாள் கட்டுரையாளர் அதைப் பகிரங்கப்படுத்தியதாகவும், அப்போதிருந்து அந்தப் பெயர் நிலைத்து நின்றது என்கிறார்கள்.
மதிப்பு
ஒரு ஆஸ்கார் சிலை மதிப்பு என்ன?
இந்த ஆஸ்கார் சிலை 13 1/2 அங்குல உயரமும் 8.5 பவுண்டுகள் எடையும் கொண்டது. ஒவ்வொன்றும் தயாரிக்க $400க்கும் மேல் செலவாகும்.
இருப்பினும், வெற்றியாளர்கள் தங்கள் சிலைகளை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஒரு ஆஸ்கார் விருதை விற்க வேண்டுமென்றால், முதலில் அதை வெறும் $1.00க்கு அகாடமிக்கு வழங்க வேண்டும் என்று அகாடமியின் விதிமுறை கூறுகிறது. 1951 இல் இந்த விதி அறிமுகம் செய்யப்பட்டது.
உரை வரம்பு
ஏற்புரைகளுக்கான 45-வினாடி கால வரம்பு
ஆஸ்கார் விருதை வெல்வது என்பது ஒரு பெருமைமிகு தருணம்.
எனினும் அந்த தருணத்தில் வெற்றியாளர்கள் தங்கள் ஏற்புரைகளை சுருக்கமாக வைத்திருக்கவேண்டும் என வரையறுக்கப்பட்டுள்ளது.
விழாவின் ஓட்டத்தைப் பராமரிக்கவும், நிகழ்ச்சியை அதிக நேரம் இழுப்பதைத் தவிர்க்கவும், அகாடமி உரைகளுக்கு 45 வினாடிகள் என்ற கடுமையான வரம்பு அமல்படுத்துகிறது.
மரபுகள்
ஆஸ்கார் மரபுகள் மற்றும் சுவாரசியமான தகவல்கள்
ஆஸ்கார் சிலைகள் வெண்கல கலவையால் ஆனவை மற்றும் தங்க முலாம் பூசப்பட்டவை.
அவை முதலில் தூய தங்கத்தால் செய்யப்பட்டன, ஆனால் பின்னர் செலவுகளைக் குறைக்க மாற்றப்பட்டன.
முதல் அகாடமி விருது வழங்கும் விழா 1929 ஆம் ஆண்டு ஹாலிவுட் ரூஸ்வெல்ட் ஹோட்டலில் நடைபெற்றது.
இதில் சுமார் 270 விருந்தினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். அகாடமி விருதுகள் உலகளவில் அதிகம் பார்க்கப்படும் தொலைக்காட்சி நிகழ்வுகளில் ஒன்றாகும், இது பல மொழிகளில் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது.
ஆஸ்கார் விருது வென்ற மிகவும் இளமையான வெற்றியாளர், டாட்டம் ஓ'நீல் என்ற நடிகர்- 10 வயதில் வென்றார். வயதான வெற்றியாளர் கிறிஸ்டோபர் பிளம்மர் ஆவார், அவர் 82 வயதில் விருதை வென்றார்.