இந்தியன் 2 அப்டேட்: அடுத்த கட்ட படப்பிடிப்பு, நாளை முதல் திருப்பதியில் துவக்கம்
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு, நாளை (22 ஜனவரி) முதல் திருப்பதியில் நடைபெறவிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. அதற்காக, திருப்பதி மலையடிவாரத்தில், ஒரு பிரமாண்ட செட் போடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக, கமல்ஹாசனுடன், நடிகர் சித்தார்த்தும் பங்குபெற உள்ளதாக தெரிகிறது. கமலும், ஷங்கரும் இணைந்து பணிபுரிந்த 'இந்தியன்' முதல் பாகத்தை தொடர்ந்து எடுக்கப்பட்டு வரும் இந்த இரண்டாம் பாகத்தில், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, சித்தார்த் மற்றும் பலர் நடிக்கின்றனர். ரெட் ஜெயண்ட் மூவிஸும், லைகாவும் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத்.