Page Loader
சுதந்திர தினத்தன்று வெளியான இந்தியன் 2 புதிய போஸ்டர்
இந்தியன் 2 புதிய போஸ்டர்

சுதந்திர தினத்தன்று வெளியான இந்தியன் 2 புதிய போஸ்டர்

எழுதியவர் Venkatalakshmi V
Aug 16, 2023
01:13 pm

செய்தி முன்னோட்டம்

ஷங்கர் இயக்கும் 'இந்தியன்- 2' படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. கமலஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த் மற்றும் பலர் நடித்திருக்கும் இந்த பிரமாண்ட திரைப்படம், முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்றாற் போல, முதல் பாகத்தில் ஹீரோவாக நடித்த சேனாபதி கதாபாத்திரத்திலேயே இந்த பாகத்திலும் நடிக்கிறார் கமல்ஹாசன். அனிருத் இசை அமைக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இதன் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துவிட்டது. கிராபிக்ஸ் பணிகள் அமெரிக்காவில் நடந்து வருகின்றன. அடுத்த வருடம் பொங்கலுக்கு இந்த திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில், நேற்று சுதந்திர தினத்தை முன்னிட்டு, 'சேனாபதி'-யின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டனர்.

ட்விட்டர் அஞ்சல்

சேனாபதியின் சுதந்திர தின வாழ்த்து