இசைஞானி இளையராஜா வீட்டில் நேர்ந்த சோகம்; ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி
கோலிவுட்டின் பிரபல இசையமைப்பாளர் இளையராஜா. இன்று வரை இசைத்துறையில் அவரை மிஞ்ச ஆள் இல்லை எனக்கூறலாம். சமீபத்தில் கூட, அவர் இசையில் வெளியான 'விடுதலை' திரைப்படத்தின் பாடல்கள் அனைத்துமே ஹிட் ஆனது. மெட்டமைப்பது மட்டுமின்றி, பாடல்கள் பாடுவதும் எழுதுவதும் என பன்முக வித்தகராக திகழ்பவர் இளையராஜா. அதேபோல அவரின் மகன்களான யுவன்ஷங்கர் ராஜாவும், கார்த்திக் ராஜாவும் பிரபல இசையமைப்பாளர்களாக வலம் வருகின்றனர். மறுபுறம், இளையராஜாவின் தம்பியான கங்கை அமரனும், இசையமைப்பது, பாடல் எழுதுவது, இயக்குவது என தமிழ் திரையுலகில் பிரபலமாக உள்ளார். இவரின் மகன்கள் இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் பிரேம்ஜி. இவர்கள் அனைவருமே தமிழ் திரையுலகில் அசைக்க முடியாத சக்தியாக மாறியுள்ளனர் என்றே கூறவேண்டும். தங்கள் திறைமையினால், ரசிகர்கள் பலரை சம்பாதித்துள்ளனர்
பாவலரின் வழித்தோன்றல்கள்
இப்படி இவர்கள் திரையுலகில் கால் ஊன்ற முதன்முதலில் வித்திட்டவர் இவர்களின் மூத்த சகோதரன் ஆன பாவலர் வரதராஜன் என்பவர் தான். பண்ணைபுரம் முழுக்க தனது குரல் வளத்தால் பிரபலமானவர் பாவலர். கம்யூனிஸ்ட் கட்சியினரால் கவனம் பெற்றவர், அதன் பின்னர் அவர்களின் பிரச்சாரங்களில் பாட தொடங்கினார். அவர் கொண்டிருந்த தொடர்பு மூலம் தான், தனது சகோதரர்களை சென்னைக்கு அழைத்து வந்து, சினிமா துறையில் அறிமுகம் செய்து வைத்தார். அவரின் இளைய மகனான பாவலர் சிவா, புதுச்சேரியில் வசித்து வந்தார். இவரும் ஓரிரு படங்களுக்கு இசையமைத்துள்ளார். இளையராஜாவின் இசைக்குழுவில் இடம்பிடித்தவர். இவர் இன்று (மே 2 ) உடல்நல பாதிப்பு காரணமாக உயிரிழந்தார். இவருக்கு வயது 60.