Page Loader
"சுயமரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல": ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் விவகாரத்தில் மௌனம் கலைத்தார் இளையராஜா
ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் விவகாரத்தில் மௌனம் கலைத்தார் இளையராஜா

"சுயமரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல": ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் விவகாரத்தில் மௌனம் கலைத்தார் இளையராஜா

எழுதியவர் Venkatalakshmi V
Dec 16, 2024
06:00 pm

செய்தி முன்னோட்டம்

இசைஞனி இளையராஜா, தன்னை பற்றி சில வதந்திகள் பரவுவதாகக் கூறி, தன்னுடைய சுயமரியாதையை எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்கவில்லை என்றும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்று தன்னிலை விளக்கம் அளித்துள்ளார். இளையராஜா தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள வரிகளில், "நான் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் என்னுடைய சுயமரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல, விட்டுக்கொடுக்கவும் இல்லை" என்று தெரிவித்துள்ளார். மேலும், "என்னை மையமாக வைத்து சிலர் பொய்யான வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள். நடக்காத செய்தியை நடந்ததாகப் பரப்புகின்றார்கள். இந்த வதந்திகளை ரசிகர்களும், மக்களும் நம்ப வேண்டாம்." என்று அவர் கூறியுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

விளக்கம்

கோவில் நிர்வாகம் விளக்கம்

'ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சன்னதி அர்த்தமண்டபம் தாண்டி மடாதிபதிகள், அர்ச்சகர்கள் தவிர, மற்றவர்கள் உள்ளே செல்ல கோவில் வழக்கப்படி அனுமதி இல்லை என திரிதண்டி ஜீயர் தெரிவித்ததை இளையராஜா ஏற்றுக்கொண்டு அர்த்தமண்டபம் முன் நின்று தரிசனம் செய்தார் இளையராஜா என்று, மதுரை மண்டல அறநிலையத்துறை இணை கமிஷனர் செல்லத்துரை விருதுநகர் மாவட்ட கலெக்டருக்கு அறிக்கை அளித்துள்ளார். பொதுவாக கோவில் கர்ப்ப கிரகத்தில் ஆதீனங்கள், மடாதிபதிகள், தக்கார்கள், அறங்காவலர்கள் போன்றவர்களும், மற்ற யாரும் உள்ளே செல்ல அனுமதியில்லை. கர்ப்ப கிரகத்தின் முன் உள்ள இடம் அர்த்தமண்டபம். பட்டர், குருக்கள் ஓதுவார்கள், மடாதிபதிகள், கோவில் அறங்காவலர்கள் அனுமதிக்கப்படுவர். ஆகம விதிப்படி கட்டிய கோவில்களில், பண்டைய காலத்தில் இருந்து கடைபிடிக்கப்படும் நடைமுறை இதுதான் என விஷயம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.