தன்னுடைய டூப் நடிகருக்காக ஆவண படம் தயாரிக்கும் ஹாரி பாட்டர் நாயகன்
ஹாலிவுட் நடிகர் டேனியல் ராட்க்ளிஃப், ஹாரி பாட்டர் படம் மூலம் பிரபலமடைந்தார். அவர் தனது 'ஹாரி பாட்டர்' ஸ்டண்ட் டபுள் பற்றி ஆவணப்படம் தயாரித்துள்ளார். அந்த டூப் நடிகர், ஹார்ரி பாட்டர் படத்தின் படப்பிடிப்பின் போது, அடிபட்டு வீட்டிலேயே முடங்கினார். டேவிட் ஹோம்ஸ் என்ற பெயர் கொண்ட அந்த நபருக்கு, 'The Deathly Hallows: Part 1' படப்பிடிப்பின் போது, முதுகுத்தண்டில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதுவரை, ஹாரி பாட்டர் படங்களில், டேனியல் ராட்க்ளிஃப்-இற்காக டூப் நடிகராக பணியாற்றியுள்ளார். அவருக்கு உதவும் பொருட்டும், அவரது கடமை உணர்ச்சியை அங்கீகரிக்க வேண்டியும், இப்போது, டேனியல் ராட்க்ளிஃப் 'த பாய் ஹூ லைவ்ட்' என்ற தலைப்பில், ஒரு ஆவண படத்தை தயாரித்துள்ளாராம்.