
பிரபல வில்லன் நடிகர் 'நிழல்கள்' ரவியின் பிறந்தநாள் 67வது இன்று
செய்தி முன்னோட்டம்
கோலிவுட்டின் பிரபல வில்லன் நடிகர் 'நிழல்கள்' ரவி. இன்று அவரது 67வது பிறந்தநாள் இன்று. ரவிச்சந்திரனாக பிறந்த ரவி, கோவையில் தனது கல்லூரி படிப்பை முடித்ததும், சினிமாவின் மீது கொண்ட காதலால், திரைப்படங்களில் வாய்ப்பு தேட சென்னை வந்தார்.
1980 -இல், இயக்குனர் பாரதிராஜா எழுதி இயக்கிய, நிழல்கள் திரைப்படம் மூலம் திரைத்துறையில் நுழைந்தார்.
முற்றிலும் புதுமுகங்கள் அறிமுகம் ஆன அந்த திரைப்படத்தில், 'வாகை' சந்திரசேகர், ராபர்ட் ராஜசேகர், ரோகினி என பலர் நடித்திருந்தனர். அதனை தொடர்ந்து, பல தமிழ் திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரங்களை ஏற்று நடித்த 'நிழல்கள்' ரவி, மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.
குறுகிய காலகட்டத்திலேயே மலையாளத்தில் மட்டுமே 20 படங்கள் தொடர்ந்து நடித்தார்.
card 2
வெர்சடைல் நடிகர், பின்னணி குரல் நடிகர் ரவி
'நிழல்கள்' படத்தில் நடித்த காரணத்தால், அந்த பெயரை தன்னுடன் இணைத்துக்கொண்ட ரவி, அதன் பின்னர், குணச்சித்திர வேடங்களிலும், காமெடி கதாபாத்திரங்களிலும் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.
ஓரிரு படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். 'நிழல்கள்' ரவி இது வரை, கிட்டத்தட்ட 550 திரைப்படங்களில் நடித்துள்ளார்.
பிரபல நடிகர் ரஹ்மானுக்கு ஆரம்ப காலத்தில் டப்பிங் கொடுத்தவர் ரவி தான்.
தற்போதுவரை, பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு தமிழில் குரல் தருவதும் ரவி தான்.
பல டப்பிங் தமிழ் படங்களில், நிழல்கள் ரவியின் குரல் நிச்சயம் இடம்பெற்றிருக்கும். அதேபோல, தமிழில் நடிக்கும் ஹிந்தி நடிகர்களுக்கும், ரவியின் குரல் தான்.
நானா படேகர், ஜாக்கி ஷ்ராஃப் என பலருக்கும் இவரது குரல் பொருந்திபோகும்.
தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ளார்.