Page Loader
Cholas are back: ஏப்ரல் 16 மாலை, கோவையில் துவங்கும் பொன்னியின் செல்வன் 2 ப்ரோமோஷன்
சேர நாட்டில் கொட்டப்போகுது சோழர் படையின் முரசு

Cholas are back: ஏப்ரல் 16 மாலை, கோவையில் துவங்கும் பொன்னியின் செல்வன் 2 ப்ரோமோஷன்

எழுதியவர் Venkatalakshmi V
Apr 14, 2023
09:26 am

செய்தி முன்னோட்டம்

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்திற்கான வேலைகளை துவங்கிவிட்டதாக லைகா நிறுவனமும், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் அறிவித்துள்ளது. அதன்படி, சோழர்கள் கூட்டம், சேர மண்டலத்திலிருந்து தங்கள் ப்ரோமோஷன் பணிகளைத் துவங்கவுள்ளனர். ஆம், வரும் ஏப்ரல்-16 மாலை, கோவையில் உள்ள, ப்ரோசொன் மாலில், படக்குழு வரப்போவதாக அறிவித்துள்ளனர். இதை தொடர்ந்து அவர்கள், நாடு முழுவதும் சுற்று பயணம் மேற்கொள்ளுவார்கள் என செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன. பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம், வரும் ஏப்ரல்-28 அன்று திரைக்கு வரவுள்ளது. இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில், படக்குழு ப்ரோமோஷன் வேலைகளை எவ்வாறு திட்டமிட்டுள்ளது என அதிகாரபூர்வமாக இன்னும் அறிவிக்கவில்லை. இதற்கிடையே, படத்தின் பிரதான நாயக நாயகியரிடம் இரண்டு வாரங்கள் கால்ஷீட் பெறப்பட்டுள்ளதாகவும் ஊடக செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

ட்விட்டர் அஞ்சல்

சேர நாட்டில் கொட்டப்போகும் சோழர் படை முரசு 

card 2

சென்னையில் PS 2 Anthem

இதோடு, பொன்னியின் செல்வன் 2 படத்தின் Anthem நாளை (ஏப்ரல் 15) மாலை 7 மணிக்கு, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்ற மாதம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த Anthem-ஐ வெளியிடப்போவது யார் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த விழாவிற்கு படத்தின் நட்சத்திரங்கள் அனைவரும் கலந்துகொள்வார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அமெரிக்காவில் படத்துக்கான முன்பதிவு, இன்று (ஏப்ரல் 14) முதல் தொடங்குகிறது எனவும் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

நாளை வெளியாகிறது PS 2 Anthem