'கண்ணனே கண்ணே' என நம்மை வசீகரித்த பாடகர் சித் ஸ்ரீராமின் பிறந்தநாள்
தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட பாடகர் சித் ஸ்ரீராம், வளர்ந்தது அமெரிக்காவில். தனது 3-வது வயதிலிருந்து இசை பயிற்சியை தொடங்கிய சித், வெளிநாட்டு இசை பாணியையும் கற்றுகொண்டார். இசை சம்மந்தப்பட்ட மேற்படிப்பை முடித்தவர், தனது இசை ஆல்பம் மூலமாக ஏ.ஆர்.ரஹ்மானின் கவனத்தை பெற்றார். மணிரத்னம் இயக்கிய 'கடல்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வாய்த்த சித், 'வானம் கொட்டட்டும்' படத்தின் மூலமாக இசையமைப்பாளராகவும் ப்ரொமோட் ஆனார். இவரின் வித்தியசமான குரல் மூலம், இவர் பாடிய அனைத்து பாடல்களும் ஹிட் அடித்தது. இன்று அவரின் 33-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த நாளில் அவர் பாடிய சில வசீகரிக்கும் பாடல்கள் சில:
சித் ஸ்ரீராம் பாடி, பிரபலமான பாடல்கள்
அடியே, கடல்: இவர் பாடிய முதல் பாடல். அவரின் கணீர் குரலும், ரஹ்மானின் இசையும், இந்த பாடல் பிரபலமாக காரணம். என்னோடு நீ, ஐ: இந்த படத்தின் பாடல்கள் அனைத்துமே ஹிட். ஆனாலும், சித் குரலில் பாடிய இந்த மெலோடி பாடல், மனதை வருடும். ஹே பெண்ணே, கட்டப்பாவை காணோம்: பாஸ்ட் பீட்டாக உருவான இந்த பாடல், சந்தோஷ் தயாநிதி இசையில் உருவானது. குறும்பா, டிக்டிக்டிக்: தந்தை-மகனுக்கான பாசத்தை வெளிக்காட்டும் அழகிய பாடல். என்னடி மாயாவி, வடசென்னை: சந்தோஷ் நாராயணன் இசையில் உருவான மெலடி பாடல். அதிக கருவிகள் இல்லாமல், சித்தின் குரலிலேயே மனதை வருடும் பாடல். கண்ணான கண்ணே, விஸ்வாசம்: தேசிய விருது பெற்ற பாடல், இன்றும் பலரின் ரிங்டோனாக உள்ளது.