'ஆடி போனா' முதல் 'மைனரு வேட்டி கட்டி' வரை நம்மை ஆட்டம் போட வைத்த சந்தோஷ் நாராயணனின் பிறந்தநாள்!
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், தமிழ் சினிமாவில் ஒரு புதுவிதமான இசையை அறிமுகப்படுத்தினார் எனக்கூறலாம். தேவாவிற்கு பிறகு, கானா பாடல்களுக்கு ஒரு வெற்றிடம் அமைந்ததை, சந்தோஷ் நிறைவு செய்தார் எனக்கூறலாம். இன்று அவர் தனது 40-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். திருச்சியில் பிறந்த வளர்ந்த சந்தோஷ் நாராயணன், இசை மேல் இருந்த ஆர்வத்தால், பொறியியல் படிப்பை முடித்ததும் ரெகார்டிங் என்ஜினீயராக ஏ.ஆர்.ரஹ்மானிடம் பணி புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 'அட்டக்கத்தி' படத்தின் மூலம், திரையுலகில் நுழைய வாய்ப்பு கிடைத்தது. அன்று முதல், பா.ரஞ்சித், கார்த்திக் சுப்புராஜ், மாரி செல்வராஜ் போன்றோரின் ஆஸ்தான இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தான். இந்த நாளில் அவர் இசையமைத்து, நம்மை மகிழ்வித்த சில பாடல்களின் பட்டியல் இதோ:
சந்தோஷ் நாராயணன் இசையில் வெளியான பாடல்கள்
'ஆடி போனா', அட்டகத்தி: தனது அறிமுக படத்திலேயே, வட சென்னையின் பிரபலமான கானா பாடலை மெட்டமைத்து, ஹிட் ஆக்கினார். 'மோகத்திரை', பீட்ஸா: பிரதீப் குமாரின் மெலடி வாய்ஸில், விஜய் சேதுபதி நடித்த பாடல். குக்கூ: இந்த படத்தின் பாடல்கள் அனைத்துமே ஹிட் தான். குறிப்பாக, 'மனசுல சூறைக்காத்தே' பாடல். இதை பாடியது இசையமைப்பாளர் சீயான் ரோல்டன். 'காகித கப்பல்', மெட்ராஸ்: கானா பாலா பாடிய மெலடி பாடல் இது. 'அவள்', மனிதன்: பிரதீப் குமார் பாடிய ரொமான்டிக் சாங் இது. இன்றும் பலராலும் ரசிக்கக்கூடிய பாடல் 'நெருப்பு டா', கபாலி: ரஜினிக்காக போடப்பட்ட மாஸ் சாங், இப்போது MSதோனிக்கும் போடப்படுகிறது என்றால், பாடலின் மகத்துவத்தை நீங்களே புரிந்து கொள்ளுங்கள்.