மஞ்சுமேல் பாய்ஸ் மற்றும் ஹனுமான் ஓடிடி தேதி அறிவிப்பு
கடந்த சில மாதங்களுக்கு முன்னர், வேற்று மொழியில் தயாராகி, தமிழ்நாட்டில், தமிழ் சினிமாவை விட அதிக காலெக்ஷன் பெற்ற இரண்டு பெரிய திரைப்படங்கள் 'ஹனுமான்' மற்றும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்'. இந்த திரைப்படங்களின் ஓடிடி தேதி தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோடிக்கணக்கில் தமிழ்நாட்டில் மட்டுமே திரையரங்கு வசூலை வாரிக்குவித்த இந்த திரைப்படங்கள், ஒரே நாளில் ஓடிடியில் ரிலீஸ் ஆகிறது. இந்த இரண்டு படங்களும், வரும் ஏப்ரல் 5-ஆம் தேதி டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹனுமன் திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் பொங்கல் வெளியீடாக திரைக்கு வந்தது. இதன் ஹிந்தி பதிப்பு ஏற்கனவே ஜியோ சினிமாவில் வெளியாகி இருந்தாலும், தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள வெளியீட்டு உரிமையை டிஸ்னி ஹாட்ஸ்டார் பெற்றுள்ளது.