
KH233 தாமதம்; அதிரடியாக தனுஷுடன் இணையும் H.வினோத்?
செய்தி முன்னோட்டம்
'சதுரங்க வேட்டை' புகழ் இயக்குனர் H.வினோத், கமல்ஹாசன் உடன் இணைந்து அவரது 233வது படத்தை இயக்குவதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால், கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2, கல்கி, தஃக் லைஃப் என வரிசையாக நடித்து வருகிறார்.
எனினும், இந்த KH233 படத்தை ஆரம்பிப்பதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை.
இதனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த 'KH 233' படம் டிராப் ஆகி விட்டதோ என்ற சந்தேகமும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்த நிலையில் தான் மற்றுமொரு தகவலும் கசிந்துள்ளது.
அதன்படி, ஹெச்.வினோத், தீரன் அதிகாரம் -2 படத்தின் கதையை முடித்ததும், தனுஷுடன் இணையவுள்ளார்.
தனுஷ் தற்போது சேகர் கம்முலா உடன் இணைந்துள்ளார். அந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்ததும், தனுஷ் வினோத்துடன் இணைவார் என கூறப்படுகிறது.
ட்விட்டர் அஞ்சல்
தனுஷுடன் இணையும் எச். வினோத்
Director By: #HVinoth (Thunivu)
— TamilDelight (@TamilDelight) January 23, 2024
Lead Role : #Dhanush
Production By : 7 Screen Studio (#LEO)
This Project ✅ Confirmed 👍 pic.twitter.com/jOnIgLR8V3