ரத்தம் சொட்ட சொட்ட வித்தியாசமான லுக்கில் அனுஷ்கா ஷெட்டி: காட்டி கிலிம்ப்ஸ் வீடியோ
செய்தி முன்னோட்டம்
நடிகை அனுஷ்கா ஷெட்டி, தெலுங்கு இயக்குனர் கிரிஷ் ஜகர்லமுடி இயக்கத்தில் நடித்து வரும் 'Ghaati' என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இதன்மூலம் நீண்ட இடைவேளைக்கு பின்னர் அவர் மீண்டும் வெள்ளித்திரைக்கு வருகிறார்.
மேலும் இன்று அனுஷ்கா ஷெட்டியின் பிறந்த நாளை முன்னிட்டு, படத்தின் 47 வினாடி காட்சியை கிலிம்ப்ஸ் வீடியோவாக தயாரிப்பாளர்கள் இன்று வெளியிட்டனர்.
அதில் ரத்தம் சொட்ட சொட்ட ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் அனுஷ்கா ஷெட்டி நடித்திருப்பதை பார்த்த அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
வீடியோவில் காட்டப்பட்டுள்ளதன் படி, அனுஷ்கா ஒரு நாடோடி கூட்டத்தினை சேர்ந்தவர் போல தோற்றம் தருகிறார்.
செய்திகளின் படி, சட்டவிரோத கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டு பாதிக்கப்பட்ட ஒரு பெண் எப்படி கிரிமினல் மூளையாக மாறுகிறார் என்பதே கதை.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Fierce and menacing 💥
— UV Creations (@UV_Creations) November 7, 2024
Witness 'The Queen' #AnushkaShetty breathing fire 🔥🔥#GhaatiGlimpse out now!
▶️ https://t.co/aanFvSxXxS#GHAATI in Telugu, Tamil, Hindi, Kannada and Malayalam.#HappyBirthdayAnushkaShetty@DirKrish @UV_Creations @FirstFrame_Ent pic.twitter.com/rC2OSTEv0w