`கருடன்' திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு
கோலிவுட்: ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள கருடன் படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதியை அப்படக்குழுவினர் அறிவித்துள்ளனர். சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன் ஆகியோர் நடித்துள்ள இப்படம் மே 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், அதன் டிரைலர் வெளியீட்டு விழா வரும் மே 21 ஆம் தேதி காலை 9.30 மணியளவில் சென்னை சத்யம் சினிமாவில் நடைப்பெறவுள்ளது. எதிர் நீச்சல் (2013), காக்கி போன்ற தமிழ் திரைப்படங்களை இயக்கிய ஆர்.எஸ்.துரை செந்தில்குமார், இப்படத்தையும் இயக்கி உள்ளார். கருடன் திரைப்படத்தை கே.குமாரின் லார்க் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது. ஷிவதா, ரோஷினி ஹரிப்ரியன், சமுத்திரக்கனி, மைம் கோபி, ஆர்.வி.உதயகுமார், வடிவுக்கரசி, துஷ்யந்த், மொட்டை ராஜேந்திரன், பிரகிதா ஆகியோர் இதில் நடித்துள்ளனர்.