Loading...
காந்தி ஜெயந்திக்கு மோதும் 5 படங்கள்: பாக்ஸ் ஆபீஸில் கல்லா கட்டப்போகும் வெற்றி நாயகன் யார்?
காந்தி ஜெயந்தி விடுமுறையை முன்னிட்டு பல்வேறு திரைப்படங்கள் வெளியாகின்றன.

காந்தி ஜெயந்திக்கு மோதும் 5 படங்கள்: பாக்ஸ் ஆபீஸில் கல்லா கட்டப்போகும் வெற்றி நாயகன் யார்?

எழுதியவர் Vasuki
Sep 29, 2026
01:57 pm

செய்தி முன்னோட்டம்

காந்தி ஜெயந்தி தொடர் விடுமுறை தினங்களை முன்னிட்டு தமிழ் திரையுலகில் பாக்ஸ் ஆபிஸிற்கான பலப்பரீட்சை தீவிரமடைந்துள்ளது. கடந்த வாரம் வெளியான படங்களில் கீர்த்தி சுரேஷின் டோரதி திரைப்படம் பெரிய அளவில் பார்வையாளர்களை ஈர்க்காமல் ரூ.5 கோடியை மட்டுமே எட்டிய நிலையில், ஹிப்ஹாப் தமிழா ஆதியின் 'மீசைய முறுக்கு 2' பிளாக்பஸ்டர் ஹிட்டாகி ரூ.50 கோடிக்கும் மேல் வசூலித்து குடும்ப ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியது. இதன் தொடர்ச்சியாக, இந்த வாரம் அக்டோபர் 1 மற்றும் அக்டோபர் 2 ஆகிய தேதிகளில் விஜய் சேதுபதி, ஜேசன் சஞ்சய், நிவின் பாலி, அசோக் செல்வன், ஃபகத் ஃபாசில் எனப் பல முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்கள் திரையரங்குகளில் வரிசையாகக் களமிறங்கவுள்ளன.

தொடர் சர்ச்சை

விஜய் சேதுபதியின் பத்தா

அட்லி தயாரிப்பில் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள பத்தா திரைப்படம் அக்டோபர் 1-ஆம் தேதி வெளியாகிறது.

சாய் அபயங்கர் இசையில் 80ஸ் வைப் டிரெண்ட்டை உருவாக்கியுள்ள இத்திரைப்படம், இசை வெளியீட்டு விழாவில் விஜய் மற்றும் அட்லி தொடர்பான பேச்சுக்கள், பிக் பாஸ் மேடை விளக்கங்கள் எனப் பல்வேறு சர்ச்சைகளால் உச்சக்கட்ட விளம்பரத்தைப் பெற்றுள்ளது.

மகாராஜா மற்றும் தலைவன் தலைவி வெற்றிக்குப் பிறகு விஜய் சேதுபதிக்கு இது மீண்டும் ஒரு மாபெரும் கமர்ஷியல் வெற்றியாக அமையுமா என்ற பெருத்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவுகிறது.

நீண்ட நாள் காத்திருப்பு

ஏழு கடல் ஏழு மலை

இயக்குநர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி, சூரி, அஞ்சலி ஆகியோர் நடித்துள்ள ஏழு கடல் ஏழு மலை திரைப்படம் பல தடைகள் மற்றும் ரிலீஸ் சிக்கல்களைத் தாண்டி இறுதியாக அக்டோபர் 1-ஆம் தேதி திரைக்கு வருகிறது.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இத்திரைப்படம், சர்வதேச திரைப்பட விழாக்களில் பலத்த பாராட்டைப் பெற்ற நிலையில், திரையரங்குகளில் தீவிர சினிமா விரும்பிகளையும் ரசிகர்களையும் எந்தளவுக்கு ஈர்க்கும் என்ற ஆவல் எழுந்துள்ளது.

ADVERTISEMENT

மற்றவை

அசோக் செல்வனின் 'அன்பில் அவன்'

அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி விடுமுறையை முன்னிட்டு திரையரங்குகளில் மும்முனைப் போட்டி நிலவுகிறது.

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில், சந்தீப் கிஷன் - ஃபரியா அப்துல்லா நடிப்பில் உருவாகியுள்ள 'சிக்மா' திரைப்படம் லைகாவின் பிரம்மாண்ட தயாரிப்பில் வெளியாகிறது.

விஜய் ரசிகர்களின் ஆதரவால் இதற்குப் பலத்த எதிர்பார்ப்பு உள்ளது.

இத்துடன், ஆர். கார்த்திக் இயக்கத்தில் அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன் நடித்துள்ள அன்பில் அவன் படமும், எஸ்.எஸ். ராஜமௌலி தயாரிப்பில் ஃபகத் ஃபாசில் மாயாஜால நாயகனாகத் தோன்றும் 'டோன்ட் ட்ரபுள் தி ட்ரபுள்' படமும் திரைக்கு வருகின்றன.

விடுமுறை வசூலைக் குவிக்கப்போகும் படம் எது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எகிறியுள்ளது.

ADVERTISEMENT