இந்திரா காந்தி, நர்கிஸ் தத் ஆகியோரின் பெயர்களில் வழங்கப்பட்ட தேசிய திரைப்பட விருதுகளில் மாற்றம்
தேசிய திரைப்பட விருதுகளின் சில பிரிவுகளில் இருந்து முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி மற்றும் மறைந்த நடிகை நர்கிஸ் தத்தின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. மாற்றத்திற்கான காரணம் தெரியவில்லை. 70-வது தேசிய திரைப்பட விருதுகள் 2022-ன் விதிமுறைகள் படி, வரும் ஆண்டு முதல், விருது வழங்கும் விழாவில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி மற்றும் மறைந்த நடிகை நர்கிஸ் தத் ஆகியோரின் பெயர்கள் பயன்படுத்தப்படாது என்று நேற்று (13, பிப்ரவரி) செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது. கமிட்டி பதிவேற்றிய அறிவிப்பில், முன்னதாக 'சிறந்த அறிமுகப் படத்திற்கான தரப்பட்ட இந்திரா காந்தி விருது' தற்போது 'இயக்குனரின் சிறந்த அறிமுகப் படம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மாற்றமடையும் தேசிய விருதுகள்
அதே நேரத்தில், தேசிய ஒருமைப்பாடு குறித்த சிறந்த திரைப்படத்திற்கான 'நர்கிஸ் தத் விருது', 'தேசிய, சமூக மற்றும் சுற்றுச்சூழலை ஊக்குவிக்கும் சிறந்த திரைப்படமாக' மறுபெயரிடப்பட்டுள்ளது. முந்தைய விருது பெறும் இயக்குனருக்கு, ஸ்வர்ண கமல் மற்றும் ரூ.3 லட்சமும், பிந்தைய விருது பெறும் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனருக்கு, ரஜத் கமல் மற்றும் தலா ரூ.2 லட்சமும் வழங்கப்படும். சிறந்த அறிமுகப் படத்திற்கான இந்திரா காந்தி விருது, ஒரு இயக்குனரின் சிறந்த முதல் படத்திற்கான விருது. முன்னாள் பிரதமரின் பெயர் 1984 இல் அவரது மரணத்திற்குப் பிறகு ஏறுக்கொள்ளப்பட்டது. மறுபுறம், 1965 ஆம் ஆண்டு 13வது தேசிய திரைப்பட விருதுகளில் தேசிய ஒருமைப்பாடு குறித்த சிறந்த திரைப்படத்திற்கான 'நர்கிஸ் தத் விருது' ஒரு வகையாக நிறுவப்பட்டது.