Page Loader
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் வாழ்க்கை திரைப்படமாகிறது
முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் வாழ்க்கை திரைப்படமாகிறது

எழுதியவர் Venkatalakshmi V
Aug 20, 2024
10:45 am

செய்தி முன்னோட்டம்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங்கின் வாழ்க்கையை மையமாக வைத்து திரைப்படம் ஒன்று உருவாகவுள்ளது. பூஷன் குமார் தயாரிக்கும் இந்த படத்தை பற்றிய அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அவருக்கு ரவி பகசந்த்கா இணை தயாரிப்பாளராக இருப்பார். தயாரிப்பாளர் பூஷன் குமார் மற்றும் ரவி சமீபத்தில் யுவராஜை சந்தித்தனர், அதன் படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. புற்றுநோய் போன்ற கடுமையான நோயை எதிர்த்துப் போராடி தன்னை மீண்டும் களத்திற்குக் கொண்டு வந்த இந்த வீரரின் கதை நிச்சயம் பலருக்கும் ஊக்கம் தரக்கூடியதாக இருக்கும்.

வாழ்க்கை வரலாறு

யுவராஜ் சிங் வேடத்தில் நடிப்பது யார்?

யுவராஜின் வாழ்க்கை வரலாறு படத்தின் தலைப்பு இன்னும் அறிவிக்கப்படவில்லை. படம் தொடர்பான கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும். யுவராஜ் கதாபாத்திரத்திற்கு ரன்பீர் கபூர் தேர்வு செய்யப்படலாம் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இருப்பினும், யுவராஜ் ஒரு நேர்காணலில், தனது வாழ்க்கை வரலாறு படமாக இருந்தால், சித்தாந்த் சதுர்வேதி தனது கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். யுவராஜின் பலத்தால், இந்தியா 2011 ஆம் ஆண்டில் இரண்டாவது முறையாக ஒருநாள் உலகக் கோப்பையை வென்றது என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். MS தோனியை தொடர்ந்து விரைவில் அவரை பற்றிய பற்றிய பயோபிக் திரைக்கு வரும் என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

ட்விட்டர் அஞ்சல்

யுவராஜ் சிங்கின் பயோபிக்