தேமுதிக தலைவர் விஜயகாந்த் மரணம்: தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளில் காலை காட்சிகள் ரத்து
தேமுதிக தலைவரும், புகழ் பெற்ற தமிழ் திரைப்பட நடிகருமான விஜயகாந்த், இன்று காலை நிமோனியா தொற்று பாதிப்பால் உயிரிழந்தார். அவரின் உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளது. இவரின் மறைவிற்கு ரசிகர்கள், தொண்டர்கள் மற்றும் திரைத்துறையினர் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும், இவரது மரணத்திற்கு அஞ்சலி செலுத்தும் வகையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் காலை காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை அறிவித்த தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம், "அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்" என தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் தெரிவித்தார்.