
தந்தையர் தினம்: விக்னேஷ் சிவன் தனது மகன்களுடன் கொஞ்சி விளையாடும் வீடியோ வைரல்
செய்தி முன்னோட்டம்
தந்தையர் தினத்தை முன்னிட்டு, தனது மகன்களுடன் தனது கணவர் விக்னேஷ் சிவன் விளையாடும் ஒரு வீடியோவை நயன்தாரா பகிர்ந்துள்ளார்.
மேலும், "உலகில் உள்ள அனைத்து அப்பாக்களுக்கு தந்தையர் தினம் வாழ்த்துக்கள்" என்று அவர் கூறியுள்ளார்.
2005ஆம் ஆண்டு வெளியான ஐயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி, தமிழ் ரசிகர்களின் மனதில் லேடி சூப்பர் ஸ்டாராக நிலைத்து நின்றவர் நயன்தாரா.
8 ஆண்டுகளாக இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வந்த அவர், 2022ஆம் வருடம் அவரை திருமணம் செய்து கொண்டார்.
கடந்த அக்டோபர் 10ஆம் தேதி இவர்களுக்கு இரட்டை குழந்தைகளும் பிறந்தன.
மிகவும் அன்போடும் அன்யோனியத்தோடும் வாழ்க்கை நடத்தி வரும் இவர்கள், தற்போது குழந்தைகளுடன் விளையாடுவது போன்ற வீடியோக்களை அடிக்கடி பகிர்ந்து வருகின்றனர்.
ட்விட்டர் அஞ்சல்
விக்னேஷ் சிவனின் வீடியோவை பகிர்ந்த நயன்தாரா
Happy Father’s Day to all the Fathers in the World😇 pic.twitter.com/fVKfL0q03R
— Nayanthara✨ (@NayantharaU) June 16, 2024