LOADING...
ஃபெவிகால், வோடஃபோன் zoozoo விளம்பரங்களுக்கு பெயர் பெற்ற விளம்பரதாரர் பியூஷ் பாண்டே காலமானார்
பியூஷ் பாண்டே வெள்ளிக்கிழமை தனது 70வது வயதில் காலமானார்

ஃபெவிகால், வோடஃபோன் zoozoo விளம்பரங்களுக்கு பெயர் பெற்ற விளம்பரதாரர் பியூஷ் பாண்டே காலமானார்

எழுதியவர் Venkatalakshmi V
Oct 24, 2025
01:13 pm

செய்தி முன்னோட்டம்

ஃபெவிகால் நிறுவனத்தின் சின்னமான பிரச்சாரங்களுக்கும், வோடஃபோன் விளம்பரத்தில் பக் இடம்பெறும் விளம்பரங்களுக்கும் பெயர் பெற்ற விளம்பர ஜாம்பவான் பியூஷ் பாண்டே வெள்ளிக்கிழமை தனது 70வது வயதில் காலமானார். இந்தியாவின் விளம்பரத் துறையில் ஒரு முன்னோடியாக கருதப்படும் அவர், மறக்கமுடியாத பிரச்சாரங்களின் பாரம்பரியத்தை விட்டுச் செல்கிறார். கேட்பரியின் 'குச் காஸ் ஹை' மற்றும் ஆசிய பெயிண்ட்ஸின் 'ஹர் குஷி மெய்ன் ரங் லே' முதல் வோடபோனின் சின்னமான பக் விளம்பரம் வரை, பாண்டேயின் கருத்துக்கள் இந்திய பாப் கலாச்சாரத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளன. பியூஷ் பாண்டே, இந்தியாவின் விளம்பரத் தந்தை என்று பரவலாக அழைக்கப்படுகிறார். இதற்குக் காரணம், அவர் உருவாக்கிய விளம்பரங்கள் மக்களுடைய மொழியில், உணர்வுகளைப் பேசியதுதான்.

#1

ஃபெவிகால் (Fevicol) — "இந்த ஃபெவிகால் பிணைப்பு உடையாது"

ஃபெவிகால் பேருந்து விளம்பரம்: கிராமப்புற சாலையில் கூட்ட நெரிசலுடன் செல்லும் ஒரு பேருந்து சிதையாமல் அல்லது பயணிகளை கீழே தள்ளாமல் இருப்பதற்குக் காரணம் ஃபெவிகால் ஒட்டும் பசையின் வலிமைதான் என்று நகைச்சுவையாகச் சித்தரிக்கப்பட்டது. ஃபெவிகால் முட்டை விளம்பரம்: ஒரு கோழி ஃபெவிகால் டின்னிலிருந்து "உணவு" உண்ட பிறகு, உடையாத முட்டையைப் போடுவது போல் காட்டப்பட்டது. ஃபெவிக்விக் மீன்பிடி விளம்பரம்: ஒரு மீனவர், ஃபெவிக்விக் தடவிய குச்சியைக் கொண்டு உடனடியாக மீன்களைப் பிடிப்பார், ஆனால் அதை தடவாத மற்றொரு மீனவர் அவரை ஆச்சரியத்துடன் பார்ப்பார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

#2

கேட்ஃபெரி டெய்ரி மில்க் (Cadbury Dairy Milk)

ஒரு கிரிக்கெட் போட்டியில், தனது துணையின் வெற்றிக்கான ரன்களை பெற்றதும் ஒரு பெண், மகிழ்ச்சியில் பெரிய சாக்லேட் பாருடன் மைதானத்திற்குள் ஓடி வந்து நடனமாடுவார். இந்த விளம்பரம் பாலின பாத்திரங்களை உடைத்ததாக போற்றப்பட்டதுடன், சாக்லேட் என்பது குழந்தைகளுக்கு மட்டுமன்றி எல்லா வயதினருக்கும் உரியது என்பதை உணர்த்தியது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

#3

போலியோ சொட்டு மருந்து (Pulse Polio)

நடிகர் அமிதாப் பச்சன் இடம்பெற்ற இந்த மக்கள் நலத் தொண்டு விளம்பரம், "வாழ்க்கையின் இரண்டு துளிகள்" என்ற எளிமையான இந்தி வாசகத்துடன் உணர்வுபூர்வமான கதையைச் சொன்னது. இதன் மூலம் நாடு முழுவதும் போலியோவை ஒழிக்க ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

#4

வோடஃபோன் (ஹட்ச்)

ஒரு சிறிய பையனை அவனது பக் நாய் (pug dog) எல்லா இடங்களிலும் பின்தொடர்வது போல் சித்தரிக்கப்பட்ட விளம்பரம் இது. இது ஹட்ச் நிறுவனத்தின் நம்பகமான நெட்வொர்க்கைக் குறித்தது - "நீங்கள் எங்கு சென்றாலும், எங்கள் நெட்வொர்க் உங்களைப் பின்தொடரும்." (நெட்வொர்க் நம்பகத்தன்மை) இது தவிர பாண்ட்ஸ் பவுடர், வோடபோன் ஜூஜூ பொம்மை விளம்பரம், 'ஹமாரா பஜாஜ்' பஜாஜ் ஸ்கூட்டர் உள்ளிட்ட பிரபல பிராண்ட்களுக்கு முத்திரை பாதிக்கும் விளம்பர வீடியோக்களை எடுத்தவர்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post