NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / சல்மான் கானை திருமணம் செய்ய அவரது பண்ணை வீட்டுக்கு சென்ற ரசிகை; இப்போது போலீஸ் காவலில்!
    அடுத்த செய்திக் கட்டுரை
    சல்மான் கானை திருமணம் செய்ய அவரது பண்ணை வீட்டுக்கு சென்ற ரசிகை; இப்போது போலீஸ் காவலில்!

    சல்மான் கானை திருமணம் செய்ய அவரது பண்ணை வீட்டுக்கு சென்ற ரசிகை; இப்போது போலீஸ் காவலில்!

    எழுதியவர் Venkatalakshmi V
    Jun 03, 2024
    04:40 pm

    செய்தி முன்னோட்டம்

    டெல்லியைச் சேர்ந்த 24 வயது பெண் ஒருவர், தன்னை சல்மான் கானின் தீவிர ரசிகை என்று கூறிக்கொண்டு, சமீபத்தில் நடிகரின் பன்வெல் பண்ணை இல்லத்திற்கு சென்றதால் அங்கே பரபரப்பு ஏற்பட்டது.

    தன்னுடைய ஹீரோவான சல்மான் கானை திருமணம் செய்துகொள்ளும் கனவுகளுடன், உற்சாகமாக பண்ணை வீட்டிற்கு சென்ற அந்த பெண் ரசிகர், அவரை சந்திக்க வேண்டும் என வலியுறுத்தினார், பிரச்னை செய்துள்ளார்.

    அதைத்தொடர்ந்து, உள்ளூர் கிராமவாசிகள், அந்த பெண் செய்த பிரச்சனைகளை பதிவுசெய்து, பன்வெல் தாலுகா காவல் நிலையத்தை அணுகியதால், அந்த பெண் ரசிகையின் கல்யாண கனவு நொறுங்கி போனது. தற்போது அந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

    காவல்துறை நடவடிக்கை

    பெண் காவலில் வைக்கப்பட்டு ஆலோசனைக்காக அனுப்பட்டுள்ளார்

    சல்மான் கானின் பன்வெல் பண்ணை வீட்டில் இந்த சம்பவம் நடந்தபோது, ​​நடிகர் அங்கே இல்லை.

    ஒரு டைம்ஸ் ஆஃப் இந்தியா அறிக்கையின்படி, போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட அந்த பெண் ரசிகை, காவல்துறையினரால் மனநல ஆலோசனைக்காக நியூ பன்வேலை தளமாகக் கொண்ட NGO, சமூக மற்றும் சுவிசேஷ சங்கம் (SEAL) க்கு அழைத்து செல்லப்பட்டார்.

    அந்த பெண் அதன் மனநல சிகிச்சைக்காக கலம்போலியில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று SEAL இன் நிறுவனர் தெரிவித்தார்.

    சல்மான் கானை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் டெல்லியில் இருந்து நவி மும்பைக்கு தனியாக பயணம் செய்து வந்துள்ளார் அந்த வெறி கொண்ட ரசிகை.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சல்மான் கான்
    திருமணம்

    சமீபத்திய

    இந்தியா-பாகிஸ்தான் பிரச்சனையில் அமெரிக்கா தலையிடாது என்று ஜே.டி. வான்ஸ் கூறுகிறார் இந்தியா
    அமெரிக்க-இங்கிலாந்திற்கு இடையே கையெழுத்தான வர்த்தக ஒப்பந்தம்! அமெரிக்கா
    பாகிஸ்தானின் முக்கிய நகரங்களின் மீது இந்தியா தாக்குதல்; தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு பாகிஸ்தான்
    இந்தியா- பாகிஸ்தான் போர்: கராச்சி துறைமுகத்தை INS விக்ராந்த் தாக்கியதாக தகவல் இந்தியா

    சல்மான் கான்

    'சிகந்தர்': சல்மான் கான்- ஏஆர் முருகதாஸ் இணையும் படத்தின் பெயர் வெளியீடு திரைப்பட வெளியீடு
    சல்மான் கான் வீட்டில் துப்பாக்கி சூடு எதிரொலி: பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்த சினிமா தொழிலாளர்கள் அமைப்பு சினிமா
    சல்மான் கான் வீட்டின் மீது துப்பாக்கி சூடு நடத்திய மர்மநபர்கள் குஜராத்தில் கைது மும்பை
    நடிகர் சல்மான் கான் வீடு மீது துப்பாக்கி சூடு நடத்தினால், ₹ 4 லட்சம் பரிசு: போலீஸ் விசாரணையில் அம்பலம் துப்பாக்கி சூடு

    திருமணம்

    விஜய் வர்மாவை விரைவில் திருமணம் செய்யவுள்ள தமன்னா பாட்டியா? நடிகர்
    இன்று திருமணம்: வருங்கால கணவருடன் கார்த்திகா நாயர் வெளியிட்ட புகைப்படங்கள் வைரல் சினிமா
    மகளை மர்ம கும்பல் கடத்தியதாக புகாரளித்த தாய் - அம்பலமான உண்மை  காவல்துறை
    ஜார்கண்ட்டில் கார் மரத்தில் மோதியதால் 5 பேர் பலி, 5 பேர் காயம் விபத்து
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025