உலக நடன தினம்: வித்தியாசமான நடன அசைவுகளினால், பிரபலமடைந்த பாடல்கள்
இன்று உலக நடன தினம். இந்த நாளில், தமிழ் திரைப்படங்களில், ஹூக் ஸ்டேப் என்று அழைக்கப்படும், வித்தியாசமான நடன அசைவுகளில் மூலம் ட்ரெண்டிங் ஆன பாடல்கள் சிலவற்றை பற்றி காண்போம். ஆளுமா டோலுமா: வேதாளம் திரைப்படத்தில், நடிகர் அஜித், ஒற்றை விரலை தூக்கி காட்டியே பிரபலமாக்கினார் எனதான் கூறவேண்டும். அனிருத்தின் குரலில் உருவான இந்த பாடல், குத்து பாட்டுகள் லிஸ்டில் தவறாமல் இடம் பெரும். ரவுடி பேபி: பிரபுதேவா நடனம் அமைத்திருந்தார். காலில் அணியும் ஷூவை இப்படியும் பயன்படுத்தலாம் என காட்டிய பாடல் இது சல்மார்: நீண்ட இடைவேளைக்கு பிறகு பிரபுதேவா நடித்த திரைப்படம். அவரின் நடனத்தை காண பலரும் ஆவலுடன் இருக்க, அவர்களை ஏமாற்றவில்லை பிரபுதேவா.
ஆஸ்கார் விருது வென்ற நாட்டு கூத்து பாடல்
டம் டம்: இந்த பாடல் இன்றளவும் வைரலாகி வருகிறது. பிருந்தா மாஸ்டர் நடனம் அமைக்க,விஷால் மற்றும் மிருணாளினி ஆடியிருந்தனர். வாத்தி Coming: நடனம் என்றால் நடிகர் விஜய் இல்லாமலா? பெரிதாக மெனக்கெடாமல், ஒரு பக்க தோளை ஆட்டியே பிரபலம் ஆன பாடல் இது. நாட்டு கூத்து: ஆஸ்கார் விருது பெற்ற பாடல், வெளிநாட்டவரையும் நடனமாட வைத்த பாடல் இது. ராம்சரண் மற்றும் ஜூனியர் NTR இருவரும் அச்சுபிசகாமல் ஆடிய காட்சி பலராலும் பாராட்டப்பட்டது. மேகம் கருக்காதா: தனுஷ் நடிப்பில் மட்டுமல்ல, நடனத்திலும் கலக்குபவர். சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தில் இடம்பெற்ற இந்த பாடல், தனுஷ் பாடியதாலும், அழகான நடனத்தாலும் வைரல் ஆனது.