Page Loader
பிரபல நடிகை ஷகீலாவை வளர்ப்பு மகள் தாக்கியதாக போலீசில் புகார் 

பிரபல நடிகை ஷகீலாவை வளர்ப்பு மகள் தாக்கியதாக போலீசில் புகார் 

எழுதியவர் Sindhuja SM
Jan 21, 2024
06:46 pm

செய்தி முன்னோட்டம்

வளர்ப்பு மகள் ஷீத்தல் தன்னை கொடூரமாக தாக்கி கீழே தள்ளிவிட்டதாக பிரபல நடிகை ஷகிலா பரபரப்பு புகார் அளித்துள்ளார். 1980களின் இறுதியில் மலையாள சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகை ஷகிலா, தமிழ் மொழியிலும் வசீகர நாயகியாக பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "குக் வித் கோமாளி" நிகழ்ச்சி இவரின் மொத்த பிம்பத்தையும் புரட்டிப் போட்டுள்ளது என்றால் மிகையாகாது. அதுவரை கவர்ச்சி நாயகியாக இருந்த ஷகிலாவைஅந்த நிகழ்ச்சிக்கு பிறகு பலரும் அம்மா என்று அழைக்க தொடங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை ஷகிலா தனது அண்ணன் மகள் ஷீத்தலை 6 மாத குழந்தையாக இருந்த போதிலிருந்து வளர்த்து வருகிறார்.

டக்ஜ்வ்க்

ஷகிலாவையும் அவரது வழக்கறிஞரையும் தாக்கியதாக குற்றச்சாட்டு 

பெரிய பெண்ணாக வளர்ந்த பிறகு ஷீத்தல் பலமுறை ஷகீலாவை தனது தாய் என்று குறிப்பிட்டு மேடைகளில் பேசி இருக்கிறார். இந்நிலையில், ஜனவரி 20ம் தேதி, ஷீத்தல் பிறந்த குடும்பத்தினருக்கும், அவரது வளர்ப்பு தாய் ஷகிலாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தகராறு முற்றிய நிலையில், ஷகிலா மற்றும் அவரது வழக்கறிஞர் இருவரையும் ஷீத்தல் கொடூரமாக தாக்கியதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் நடிகை ஷகீலாவை தாக்கிவிட்டு ஷீத்தல் கோடம்பாக்கத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றதாகவும் பேசப்படுகிறது. இதனையடுத்து, ஷகிலாவின் வளர்ப்பு மகள் ஷீத்தல், அவரது தாயார் மற்றும் அவரது சகோதரி ஆகியோர் சேர்ந்து நடிகை ஷகிலாவை தாக்கியதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கோடம்பாக்கம் போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர்.