புஷ்பா திரைப்படம், வெப் தொடராக உருவாக்குவதுதான் ஒரிஜினல் திட்டமா?
தெலுங்கு சினிமாவில் மாபெரும் வெற்றிப்படைப்பான புஷ்பா திரைப்படத்தின் அடுத்த பாகமான புஷ்பா 2 கடந்த வார இறுதியில் வெளியானது. இதில் செம்மர கடத்தல்காரரான புஷ்பா ராஜ்க்கு (அல்லு அர்ஜுன்) எதிராக பன்வர் சிங் ஷெகாவத் என்ற அகங்கார போலீஸ் அதிகாரியாக ஃபஹத் ஃபாசில் நடித்துள்ளார். முதல் பாகம் பிரமாண்ட வெற்றி பெற்றது. அதில் இருவருக்குமான அகங்கார போர் தொடக்கத்துடன் படம் நிறைவுற்றது. இதனால் இரண்டாம் பாகத்தில் ஃபஹத் ஃபாசில் கதாபாத்திரத்திற்கு அதிகம் மதிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இரண்டாம் பக்கத்தில் அது சற்று ஏமாற்றத்தை தந்த நிலையில், 2022இல் கியூ ஸ்டுடியோவிற்கு ஃபஹத் அளித்த ஒரு நேர்காணல் வீடியோ ஒன்று வைரலாகி உள்ளது.
Twitter Post
Netflix-ற்காக திட்டமிடப்பட்ட ஒரு வெப் சீரிஸ் திரைப்படமாக மாறியது
அவர் கூறியதன் படி, இது ஆரம்பத்தில் நெட்ஃபிலிக்ஸ்-இற்காக திட்டமிடப்பட்ட ஒரு வெப் தொடர். இந்த திட்டத்திற்காக சுகுமார் தன்னை முதன்முதலில் அணுகியபோது, அது ஒரு பாக படமாக மட்டுமே இருக்கும் என்றும், இடைவேளையில் தான் அவரது கதாபாத்திரம் வரும் என்றும் ஃபஹத் கூறினார். "புஷ்பா 1, புஷ்பா 2 இல்லை, ஒரே ஒரு புஷ்பா. முதலில் போலீஸ் ஸ்டேஷன் காட்சியையும், இடைவெளியையும், பிறகு என் கதாபாத்திரத்தின் பகுதியையும் விவரித்தார். எந்த அடையாளமும் இல்லாத, வாழ்க்கையில் அனைத்தையும் சாதிக்கும் ஒருவரின் கதையை அவர் சொல்ல விரும்பினார். அவர் தனது தாயின் கனவை நிறைவேற்றுகிறார், சிறுவயது கஷ்டங்களை சமாளிக்கிறார்... பிறகு அவருடைய எல்லா பிரச்சனைகளையும் மீண்டும் நினைவுபடுத்தும் ஒரு நபர் வருகிறார்," என்று ஃபஹத் விளக்கினார்.
தொடர்ந்து அடுத்தடுத்த பாகங்கள் திட்டம்
கதையின் ஆழம் கருதி, இயக்குனர் சுகுமார் விரைவில் படத்தை இரண்டு பகுதிகளாகப் எடுக்க முடிவு செய்தார் எனவும், மூன்றாம் பாகத்திற்கான வாய்ப்பு இருப்பதாக ஃபஹத்திடம் கூறினார் எனவும் அந்த நேர்காணலில் அவர் விளக்கினார். புஷ்பா 2: தி ரூல் என்பது 2021 ஆம் ஆண்டு வெளியான புஷ்பா: தி ரைஸ் திரைப்படத்தின் தொடர்ச்சி. அடுத்ததாக புஷ்பா 3: தி ராம்பேஜ் கதையை அமைப்பதன் மூலம் படம் முடிகிறது. இருப்பினும், ஃபஹத்தின் கதாபாத்திரமான பன்வர் அதில் ஒரு பகுதியாக இருப்பாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.